மின்சார வாரியத்தில் ‘வக்கீல்’ வேலை… தேர்வு கிடையாது! மாதம் ரூ.80,000 சம்பளம்? லீகல் கன்சல்டன்ட் வாய்ப்பு!

Published On:

| By Santhosh Raj Saravanan

tneb tnpdcl legal consultant recruitment 2026 apply offline lawyer jobs

“கோர்ட், கேஸ்னு அலைஞ்சு டயர்ட் ஆயிட்டீங்களா? கவர்மெண்ட் ஆபீஸ்ல ஒரு கௌரவமான பதவியில உட்காரணும்னு ஆசையா?” தமிழ்நாடு மின்சார வாரியத்தில் (TNEB) சட்ட நிபுணர்களுக்கு ஒரு சூப்பர் வாய்ப்பு காத்திருக்கிறது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் (TNPDCL) காலியாக உள்ள ‘சட்ட ஆலோசகர்’ (Legal Consultant) பணியிடங்களை நிரப்பத் தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தேர்வு எழுதிப் போகும் வேலை இல்லை, நேரடி நியமனம் (Contract Basis) தான்!

ADVERTISEMENT

என்ன வேலை? மின்சார வாரியம் தொடர்பான வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும். அவற்றைச் சட்டரீதியாகக் கையாள்வது, வாரியத்திற்குத் தேவையான சட்ட ஆலோசனைகளை வழங்குவதுதான் இவர்களது முக்கிய பணி.

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? இந்த வேலைக்கு பிரஷர்கள் (Freshers) விண்ணப்பிக்க முடியாது. சட்டத் துறையில் அனுபவம் வாய்ந்தவர்கள் தேவை.

ADVERTISEMENT
  • கல்வித் தகுதி: சட்டத்துறையில் இளங்கலை பட்டம் (Law Degree) பெற்றிருக்க வேண்டும்.
  • முக்கிய தகுதி: ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதிகள் (Retired District Judges) அல்லது ஓய்வு பெற்ற மூத்த சிவில் நீதிபதிகள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம். அல்லது உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகக் குறைந்தது 10 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்களும் முயற்சி செய்யலாம் (குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு).

வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 65 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். (ஓய்வு பெற்றவர்களுக்கு இது ஒரு செகண்ட் இன்னிங்ஸ் வாய்ப்பு!

சம்பளம்: “வேலை பளுவுக்கு ஏற்ற ஊதியம் உண்டு!” தேர்வு செய்யப்படும் சட்ட ஆலோசகர்களுக்கு, அவர்களின் அனுபவம் மற்றும் பதவிக்கு ஏற்ப மாதம் ரூ.80,000 வரை (தோராயமாக) தொகுப்பூதியமாக (Consolidated Pay) வழங்கப்படும். இதுபோகப் போக்குவரத்துப் படி உள்ளிட்ட வசதிகளும் கிடைக்க வாய்ப்புள்ளது.

ADVERTISEMENT

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு கிடையாது. விண்ணப்பதாரர்களின் அனுபவம் மற்றும் நேர்காணல் (Interview) அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிப்பது எப்படி? விருப்பமுள்ளவர்கள் https://www.tnpdcl.org/en/tnpdcl/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

பூர்த்தி செய்த விண்ணப்பத்தை, தேவையான ஆவணங்களுடன் இணைத்து, சென்னையில் உள்ள மின்சார வாரியத் தலைமை அலுவலகத்திற்குத் தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ சமர்ப்பிக்க வேண்டும்.

கடைசி தேதி: பிப்ரவரி 2, 2026.

என்னதான் இது ஒப்பந்த அடிப்படையிலான வேலைன்னாலும், ‘டிஎன்இபி’ (TNEB) லீகல் அட்வைசர்னு விசிட்டிங் கார்டுல போடுறது தனி கெத்துதான். ஓய்வு பெற்ற நீதிபதிகளுக்கு இது ஒரு ரிலாக்ஸான, அதே சமயம் கௌரவமான பதவி. பிரைவேட் பிராக்டீஸ்ல இருக்குற சீனியர் வக்கீல்களும், இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி மின்சார வாரியத்தோட தொடர்பை ஏற்படுத்திக்கலாம். மிஸ் பண்ணாதீங்க பாஸ்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share