தமிழ்நாடு அரசு ஜாப் அலர்ட்! 10ஆம் வகுப்பு, ITI, டிப்ளோமா படித்தவர்களுக்கு பெரிய சான்ஸ்… ஸ்டேஷனரி & பிரிண்டிங் துறையில் வேலை!

Published On:

| By Santhosh Raj Saravanan

tn stationery printing department recruitment 2026 10th iti diploma

“10ஆம் வகுப்பு படிச்சவங்கலுக்கும் அரசு வேலை கிடைக்குமா?” — இந்த கேள்வி நிறைய பேருக்கு இருக்கும். அதற்கே இப்போது நல்ல அப்டேட் வந்திருக்கிறது பாஸ்.

தமிழ்நாடு அரசின் ஸ்டேஷனரி (TN Stationery) மற்றும் பிரிண்டிங் துறை (Department of Stationery and Printing) புதிய ரெக்ரூட்மெண்ட் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் அசிஸ்டென்ட் ஆஃப்செட் மெஷின் டெக்னீஷியன், ஜூனியர் எலக்ட்ரீஷியன், ஜூனியர் மெக்கானிக், பிளம்பர்-கம்-எலக்ட்ரீஷியன் போன்ற பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது.

ADVERTISEMENT

இந்த ரெக்ரூட்மெண்ட் மூலம் மொத்தம் 23 காலியிடங்கள் நிரப்பப்பட இருக்கின்றன. தகுதி உள்ளவர்கள் ஏப்ரல் 8, 2026க்கு முன்னே அப்ளை செய்ய வேண்டும்.

வேலை விவரம் – முக்கிய அப்டேட்

  • அமைப்பு: தமிழ்நாடு ஸ்டேஷனரி & பிரிண்டிங் துறை
  • மொத்த காலியிடங்கள்: 23
  • வேலை இடம்: சென்னை
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 08.04.2026
  • விண்ணப்ப முறை: ஆஃப்லைன் அப்ளிகேஷன்

காலியிடங்கள் – எந்தெந்த ஜாப்ஸ்?

இந்த ரெக்ரூட்மெண்ட் கீழ் உள்ள பணியிடங்கள்:

ADVERTISEMENT
  • அசிஸ்டென்ட் ஆஃப்செட் மெஷின் டெக்னீஷியன் – 10
  • ஜூனியர் எலக்ட்ரீஷியன் – 4
  • ஜூனியர் மெக்கானிக் – 8
  • பிளம்பர்-கம்-எலக்ட்ரீஷியன் – 1

மொத்தம் 23 அரசு வேலை வாய்ப்புகள் இந்த அறிவிப்பில் வெளியாகியுள்ளன.

கல்வித்தகுதி – யார் அப்ளை பண்ணலாம்?

இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்க:

ADVERTISEMENT
  • 10ஆம் வகுப்பு (SSLC) தேர்ச்சி
  • சம்பந்தப்பட்ட ITI டிரேட் சான்றிதழ் அல்லது
  • டிப்ளோமா (Printing Technology / Electrical போன்ற தொழில்நுட்ப படிப்பு)

இந்த தகுதி இருந்தால் இந்த வேலைக்கு அப்ளை செய்யலாம்.

சில பதவிகளுக்கு அப்ரென்டிஷிப் அல்லது வேலை அனுபவம் இருந்தால் முன்னுரிமை வழங்கப்படும்.

சம்பளம் – எவ்வளவு கிடைக்கும்?

இந்த பணியிடங்களுக்கு:

  • Level-8 ஊதிய அளவு
  • ₹19,500 – ₹71,900 மாத சம்பளம் கிடைக்கும்.

அதாவது நல்ல நிரந்தர அரசு சம்பளம் கிடைக்கும்.

வயது வரம்பு

08.04.2026 நிலவரப்படி:

  • OC: 18 – 32 வயது
  • BC / MBC / DNC: 18 – 34 வயது
  • SC / SCA / ST: 18 – 37 வயது
  • PwBD: 42 வயது வரை

அரசு விதிமுறைகளின் படி வயது தளர்வு வழங்கப்படும்.

தேர்வு முறை – எப்படி செலக்சன்?

இந்த வேலைக்கு தேர்வு செய்யப்படும் முறை:

  1. அப்ளிகேஷன் ஷார்ட்லிஸ்டிங்
  2. எழுத்துத் தேர்வு / ஸ்கில் டெஸ்ட்
  3. சான்றிதழ் சரிபார்ப்பு

இந்த மூன்று ஸ்டேஜ் அடிப்படையில் செலக்சன் நடக்கும்.

எப்படி அப்ளை பண்ணலாம்?

  1. அதிகாரப்பூர்வ இணையதளம் stationeryprinting.tn.gov.in சென்று
  2. நோட்டிபிகேஷன் & அப்ளிகேஷன் ஃபார்மை டவுன்லோடு செய்யவும்
  3. அப்ளிகேஷன் ஃபார்மை பூர்த்தி செய்யவும்
  4. தேவையான டாக்குமெண்ட்ஸ் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்

முகவரி:
கமிஷனர்,
ஸ்டேஷனரி & பிரிண்டிங் துறை,
110, அண்ணா சாலை,
சென்னை – 600002.

இதை மறந்துடாதீங்க:

பாஸ், இந்த மாதிரி அரசு வேலை வாய்ப்புகள் அடிக்கடி வராது.

  • ஏப்ரல் 8 லாஸ்ட் டேட் – லாஸ்ட் மினிட் வரை வெயிட் பண்ணாதீங்க
  • ITI / டிப்ளோமா சான்றிதழ் ரெடி வைத்துக்கோங்க
  • அப்ளிகேஷன் ஃபார்மை சரியாக ஃபில் பண்ணுங்க

10ஆம் வகுப்பு, ITI, டிப்ளோமா படித்தவர்களுக்கு இந்த ரெக்ரூட்மெண்ட் ஒரு கோல்டன் டிக்கெட் மாதிரி. மிஸ் பண்ணிடாதீங்க பாஸ்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share