“திமுகவில் உள்ள ஒவ்வொருவரையும் குறிவைத்து தாக்க தொடங்கிவிட்டது பாஜக.. இதில் நான் முதல் ஆளாக பலியாகியிருக்கிறேன்” என்று திமுக முதன்மைச் செயலாளரும் தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு கூறியுள்ளார்.
திருவாரூரில் இன்று நடைபெற்ற திமுக கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது: திமுக கூட்டணி வலிமையாக உள்ளது. எங்கள் கூட்டணியை விட்டு எந்த கட்சியும் வெளியேறவில்லை.
மு.க. ஸ்டாலினை 2-வது முறையாக முதல்வராக்குவதுதான் திமுகவினரின் கடமை. நலத்திட்ட உதவிகள் தொடரவும் மக்களுக்கு நன்மைகள் கிடைக்கவும் இதை நாம் செய்ய வேண்டும்.
திமுகவில் உள்ள ஒவ்வொருவரையும் குறிவைத்து தாக்க தொடங்கிவிட்டது பாஜக. இதில் நான் முதல் ஆளாக பலியாகி இருக்கிறேன். நாங்கள் எந்தத் தாக்குதலையும் எதிர்கொண்டு நிற்போம்; என்ன நெருக்கடி வந்தாலும் எதிர்த்து நிற்போம்.. அடிக்க அடிக்க பந்து மாதிரி எழுந்து நிற்க வேண்டும்; துவண்டு போய் விட்டு விட்டு போய்விடக்கூடாது. இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு பேசினார்.
.
