தமிழ்நாடு அரசு வழங்கும் ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ ரூ1,000 பெறுவதற்கான விதிமுறைகளில் புதிய தளர்வுகளை அறிவித்துள்ளது தமிழ்நாடு அரசு. TN Govt Kalaignar Women’s Scheme
தமிழ்நாட்டில் குடும்ப அட்டை (ரேஷன் கார்டு) உள்ளவர்களுக்கு தகுதி அடிப்படையில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ1,000 வழங்கப்படுகிறது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை என்ற பெயரிலான இந்தத் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. பெண்களிடத்தில் பெரும் ஆதரவைப் பெற்றுள்ளது.
அதே நேரத்தில், அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களின் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களுக்கு இந்த உரிமைத் தொகை வழங்கப்படுவதில்லை என்பது விதியாக இருந்தது.
மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என அண்மையில் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து விண்ணப்பித்தோருக்கு விரைவில் ரூ1,000 வழங்கப்பட இருக்கிறது.
தற்போது, கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை பெறுவதற்கான விதிமுறைகளில் புதிய தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதன்படி
- காலமுறை ஊதியம் பெற்று தற்போது ஓய்வூதியம் பெறுவோர் குடும்பங்களில் உள்ள பெண்களும் விண்ணப்பிக்கலாம்.
- அரசு துறைகளில் மானியம் பெற்று நான்கு சக்கர வாகனம் வைத்திருப்போர் குடும்பங்களை சேர்ந்த பெண்களும் விண்ணப்பிக்கலாம்
- விதவை ஓய்வூதியம் பெறுவோர் குடும்பங்களில் ஓய்வூதியதாரர் அல்லாத பெண்களும் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.