நேபாளத்திற்கு சென்ற 116 தமிழர்கள் பத்திரமாக மீட்பு!

Published On:

| By Pandeeswari Gurusamy

Tamil people who went to Nepal returned to India

நேபாளத்திற்கு சுற்றுப் பயணம் செய்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 116 நபர்கள் பத்திரமாக நேற்று இந்தியா திரும்பிவிட்டனர் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “நேபாள நாட்டில் சிக்கியுள்ள தமிழர்களின் நிலைகுறித்து அறிந்திடவும், அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கிடவும் உரிய நடவடிக்கைகள் உடன் மேற்கொள்ளுமாறு தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டார். முதலமைச்சரின் உத்தரவின்படி, நேபாள நாட்டில் சிக்கியுள்ள தமிழர்களின் நிலை குறித்து அறிந்திடவும். அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கி அவர்களை மீட்டுவருவதற்கு, புதுதில்லி, தமிழ்நாடு இல்லத்தில் 24×7 கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்திய வெளியுறவுத்துறை மற்றும் நேபாள நாட்டிலுள்ள இந்திய தூதரக அதிகாரிகளுடனும் தொடர்பு கொண்டு. தமிழ்நாட்டைச் சேர்ந்த பயணிகளை மீட்டு வர புதுதில்லி, தமிழ்நாடு இல்ல அதிகாரிகள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். நேபாளத்திற்கு சுற்றுப்பயணம் செய்த தமிழ்நாட்டைச் சார்ந்த 116 நபர்கள் பத்திரமாக நேற்று (11.09.2025) இந்தியாவிற்கு திரும்பிவிட்டனர்.

மேலும், நேபாளத்தில் சிக்கித்தவித்து வரும் தமிழர்கள் தங்களது விவரங்களை தெரிவிக்கவும். நேபாளத்தில் சிக்கியுள்ள தங்களது குடும்ப உறுப்பினர்களின் நிலை குறித்து தெரிந்து கொள்வதற்கும் புதுதில்லி தமிழ்நாடு இல்லத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள 24×7 கட்டுப்பாட்டு அறை எண்களில் தொடர்பு கொள்ளலாம்” என அதில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

தொடர்பு எண்கள் :

தொலைபேசி எண்: 011-24193300
கைபேசி எண்: 9289516712 (whatsApp)
மின்னஞ்சல்: tnhouse@tn.gov.in, prcofficetnh@gmail.com

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share