தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதி இன்னமும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் தற்போதே தமிழக தேர்தலுக்கான கட்டுப்பாட்டு மையங்களை வருமான வரித்துறை (Income Tax) அமைத்துவிட்டது.
நடைபெறவிருக்கும் 2026-ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலை முன்னிட்டு, முறையற்ற பணப் பரிமாற்றம் மற்றும் தேர்தல் செலவினங்களைக் கண்காணிப்பதற்காக, வருமான வரித்துறையின் (புலனாய்வுப் பிரிவு) சார்பில் பிரத்யேகமான 24×7 நேர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
எந்தவொரு தனிநபரோ அல்லது அரசியல் கட்சியோ, வாக்காளர்களுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ரொக்கம், பரிசுப் பொருட்கள் அல்லது இதர சலுகைகளை விநியோகிப்பது குறித்த புகார்களைத் தெரிவிக்க, கீழ்க்காணும் தொடர்பு எண்கள் அல்லது மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்பு கொள்ளலாம். தகவல் அளிப்பவர் குறித்த விவரங்கள் ரகசியமாகப் பாதுகாக்கப்படும்.
கட்டணமில்லாத் தொலைபேசி எண்: 1800 425 6669
மின்னஞ்சல் (Email) : tn.electioncomplaints2026@incometax.gov.in
வாட்ஸ் அப் (WhatsApp) எண் : 94453 94453
தொலைநகல் (Fax) 044-28271915
