ADVERTISEMENT

10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு தனித்தேர்வர்களே… அப்ளிகேஷன் போட மிஸ் பண்ணிட்டீங்களா? கவலை வேண்டாம்… வந்துடுச்சு ‘தட்கல்’ வாய்ப்பு!

Published On:

| By Santhosh Raj Saravanan

tn 10th 12th public exam 2026 tatkal application dates fees

“ஐயோ… பப்ளிக் எக்ஸாமுக்கு அப்ளை பண்ண மறந்துட்டேனே! இனிமே ஒரு வருஷம் வேஸ்டா?” என்று தலையில் கை வைத்து உட்கார்ந்திருக்கும் தனித்தேர்வர்களா (Private Candidates) நீங்கள்? பதறாதீர்கள்.

தமிழக அரசுத் தேர்வுகள் இயக்ககம் (DGE) உங்களுக்கு இன்னொரு ‘கோல்டன் சான்ஸ்’ கொடுத்துள்ளது. 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விரும்பும் தனித்தேர்வர்களுக்கான சிறப்புத் தட்கல் (Tatkal) விண்ணப்பத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதான் கடைசி வாய்ப்பு… மிஸ் பண்ணா அவ்ளோதான்!

ADVERTISEMENT

எப்போது விண்ணப்பிக்கலாம்? மார்ச்/ஏப்ரல் 2026ல் நடைபெறவுள்ள பொதுத்தேர்வுக்கு, ஏற்கனவே விண்ணப்பிக்கத் தவறியவர்கள் இந்தத் தட்கல் முறையில் விண்ணப்பிக்கலாம்.

  • தேதிகள்: ஜனவரி 9, 2026 (நாளை) முதல் ஜனவரி 11, 2026 வரை.
  • நேரம்: காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை.
  • எங்கே?: உங்கள் மாவட்டத்தில் உள்ள அரசுத் தேர்வுகள் இயக்கக சேவை மையங்களுக்கு (Government Examinations Service Centres) நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

கட்டணம் எவ்வளவு? லேட்டா போனா ஃபைன் அதிகம்னு தெரியும்ல? தட்கல் முறையில் விண்ணப்பிக்க வழக்கமான கட்டணத்துடன் கூடுதலாகச் சிறப்புக் கட்டணம் செலுத்த வேண்டும்.

ADVERTISEMENT
  • 10ஆம் வகுப்பு: தேர்வுக் கட்டணம் + தட்கல் கட்டணம் ரூ.500.
  • 11 & 12ஆம் வகுப்பு: தேர்வுக் கட்டணம் + தட்கல் கட்டணம் ரூ.1000.

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

  • நேரடித் தனித்தேர்வர்கள் (Direct Private Candidates): பள்ளியில் படிக்காமல் தனியாகத் தேர்வு எழுதுபவர்கள்.
  • தோல்வியுற்றவர்கள் (Failed Candidates): ஏற்கனவே எழுதி ஃபெயில் ஆனவர்கள்.
  • வருகை புரியாதவர்கள் (Absentees): ஹால் டிக்கெட் வாங்கிட்டு எக்ஸாம் எழுதாதவர்கள்.

இனிமே யோசிக்க டைம் இல்ல… உடனே கிளம்புங்க!

ADVERTISEMENT
  • ஆன்லைன்ல முடியாது: இதை வீட்டில் இருந்து ஆன்லைனில் பண்ண முடியாது. நேரில் தான் செல்ல வேண்டும். உங்கள் மாவட்டக் கல்வி அலுவலகத்தில் (CEO Office) விசாரித்து, அருகில் உள்ள நோடல் சென்டர் (Nodal Center) எது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
  • பணம் ரெடி பண்ணுங்க: தட்கல் கட்டணத்தை ஆன்லைனில் கட்ட முடியாது, சில இடங்களில் செலான் (Chalan) எடுக்கச் சொல்வார்கள். அதனால் கையோடு போதிய பணம் (Cash) எடுத்துச் செல்வது நல்லது.
  • டாக்குமெண்ட்ஸ் மஸ்ட்: பழைய மார்க்ஷீட், டிசி (TC), ஆதார் கார்டு, போட்டோ – இதையெல்லாம் ஒரிஜினல் மற்றும் ஜெராக்ஸ் செட் எடுத்துட்டுப் போங்க. அங்கே போய் ஜெராக்ஸ் கடை தேடி அலைய வேண்டாம்.

ஜனவரி 11ஆம் தேதி மாலை 5.45 மணிக்கு மேல ஒரு நிமிஷம் கூட டைம் தர மாட்டாங்க. இதுதான் ஃபைனல் கால்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share