திருப்பூர் : பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக பதிவிட்ட 6 பேர் கைது

Published On:

| By Pandeeswari Gurusamy

திருப்பூரில் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக கருத்து பதிவிட்ட 6 பேரை டெல்லி போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமூகவலைதளங்களில் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக சிலர் கருத்துக்கள் பதிவிட்டு வந்ததை டெல்லி கியூ பிராஞ்ச் போலீசார் கண்ட றிந்தனர்.
அந்த நபர்கள் யாரென்று ஆய்வு செய்த போது திருப்பூரில் இருந்து பதிவிட்டு வந்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து டெல்லி கியூ பிராஞ்ச் போலீசார் திருப்பூர் வந்த நிலையில் மாநகர் மற்றும் மாவட்ட போலீசார் உதவியுடன் விசாரணையை மேற்கொண்டனர்.

ADVERTISEMENT

பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக செயல்பட்டவர்கள் திருப்பூர் ஊத்துக்குளி, பல்லடம், திருமுருகன்பூண்டி பகுதியில் பதுங்கியிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து இன்று அதிகாலை ஊத்துக்குளி பகுதியில் பதுங்கியிருந்த 2 பேர், பல்லடத்தில் 3 பேர், திருமுருகன்பூண்டியில் ஒருவர் என 6 பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.

இதைத்தொடர்ந்து கைது செய்த 6 பேரையும் காவல்துறையினர் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் கைது செய்யப்பட்ட 6 பேரும் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. இவர்கள் போலி ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களுடன் திருப்பூர் பகுதியில் தங்கி பனியன் நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர்

ADVERTISEMENT

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 8 செல்போன்கள் 16 சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்ட இவர்களுக்கு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share