தமிழகத்தில் 4 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திருச்சி சரக டிஐஜி வருண்குமார், சென்னை சிபிசிஐடி டிஐஜியாக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்ற விவரம்:
TANGEDCO லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபி பிரமோத்குமார், சிவில் டிபென்ஸ் ஊர்க்காவல் படை கமாண்டராக மாற்றப்பட்டுள்ளார்.
மாநில குற்ற ஆவணக் காப்பக ஏடிஜிபி ஆயுஷ் மணி திவாரி, TANGEDCO லஞ்ச ஒழிப்புத் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
ஊர்க்காவல் படை ஐஜி ஜெயஶ்ரீ, மாநில குற்ற ஆவண காப்பகத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.
திருச்சி சரக டிஐஜி வருண்குமார், சென்னை சிபிசிஐடி டிஐஜியாக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.