சென்னையில் டமால் டுமீல் மழைதான்.. இன்று 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

By Pandeeswari Gurusamy

|

Published on 16 Sep 2025, 11:48 AM

Chennai Rain

தமிழகத்தில் இன்று (செப்டம்பர் 16) 7 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் ஒரு சில பகுதிகளிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ADVERTISEMENT

இந்நிலையில் தமிழகத்தில் இன்று பிற்பகல் ஒரு மணி வரை ஏழு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், ராணிப்பேட்டை, மேலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
வெதர்மேன் எச்சரிக்கை

சென்னை மற்றும் வட தமிழகம் முழுவதும் அடுத்த மூன்று நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், “வேலூரில் இருந்து உருவாகிய புயல்கள் மெதுவாக காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, (KTCC) மாவட்டங்களை நோக்கி நகர்கிறது. அடுத்த இரண்டு மணி நேரத்தில் நகரில் மேற்கு எல்லையை அடையும். சென்னையில் மேகமூட்டத்துடன் கூடிய அற்புதமான வானிலை இருக்கும்.

அடுத்த மூன்று நாட்கள் முழுவதும் டமால் டுமீல் மழை பெய்யும். சென்னையில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. செப்டம்பர் இரண்டாம் பாதியில் முழுவதும் வட தமிழகத்தின் இடியுடன் கூடிய மழை அதிகரிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel