வாயு மற்றும் அமிலப் பிரச்சனையை கட்டுப்படுத்தி குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த நாம் சில விஷயங்களை செய்யலாம்.
நமது உடலில் பெரும் பிரச்சனையாக இருப்பது வாயுத் தொல்லையும் (gas) அமிலப் பிரச்சனையும்தான் (acidity). மோசமான ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம், நேரம் தவறி சாப்பிடுவது, அதிகமாக வறுத்த அல்லது காரமான உணவுகளை சாப்பிடுவது, மிக விரைவாக சாப்பிடுவது, அதிகமாக தேநீர், காபி மற்றும் குளிர் பானங்கள் குடிப்பது, மிகக் குறைந்த தண்ணீர் குடிப்பது, நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது, மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மை போன்றவை அனைத்தும் செரிமான அமைப்பை பலவீனப்படுத்துகின்றன. இவை நமக்கு வாயு மற்றும் அசிடிட்டி போன்ற வயிறு சார்ந்த பிரச்சனைகளை அதிகரிக்கச் செய்கின்றன.
வயிறு சார்ந்த பிரச்சனைகளின் அறிகுறிகள் (Symptoms of stomach problems) : வாயு, வீக்கம், ஏப்பம், மலச்சிக்கல் மற்றும் அமிலத்தன்மை ஆகியவற்றை சாதாரண பிரச்சனை என்று மக்கள் புறக்கணித்து விடுகின்றன. அவை வேறு சில உடல்நல பிரச்சனைகளின் அறிகுறியாக இருக்கலாம். அதாவது வாயு மற்றும் அமிலத்தன்மை ஆகியவற்றுடன் தொடர்ந்து நெஞ்செரிச்சல் , உணவு விழுங்குவதில் சிரமம், ரத்த வாந்தி, அடர் நிற மலம், அடிக்கடி வயிற்று வலி, திடீர் எடை இழப்பு, அல்லது இரவில் இருமல் அல்லது மூச்சுத் திணறல் போன்ற பிரச்சனைகள் இருந்தால் அதனை தீவிரமாக கருத வேண்டும். இந்த அறிகுறிகள் இரைப்பை புண்கள், பித்தப்பை கற்கள், ஹெர்னியா அல்லது உட்புற வயிற்றுப் பிரச்சினைகளைக் குறிக்கலாம். மேல் வயிற்று வலி, கனமாக உணர்வது அல்லது அசௌகரியத்தை அனுபவித்தால் அல்ட்ராசவுண்ட் அல்லது எண்டோஸ்கோபி பரிசோதனை செய்துகொள்வது மிகவும் முக்கியமானது.
குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது எப்படி? (How Do Control Gas And Acitity) : வாயு மற்றும் அமிலத் தன்மையை தினசரி மாற்றங்கள் செய்வதன் மூலம் குறைக்கலாம். இது செரிமானத்தையும் கணிசமாக மேம்படுத்தும். தினமும் காலை வெதுவெதுப்பான நீரைக் குடிக்க வேண்டும். சரியான நேரத்தில் உணவை சாப்பிட வேண்டும். படுக்கைக்கு 2-3 மணி நேரத்திற்கு முன்பு இரவு உணவை சாப்பிட்டுவிட வேண்டும். வறுத்த, கனமான மற்றும் காரமான உணவுகளை கட்டுப்படுத்த வேண்டும். ஒவ்வொரு முறையும் நன்றாக மென்று சாப்பிட வேண்டும். தினமும் 8-10 குவளை தண்ணீர் குடிக்க வேண்டும். தினமும் 20-30 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்ய வேண்டும் அல்லது லேசான உடற்பயிற்சி செய்ய வேண்டும். தேநீர் மற்றும் காபியைக் கட்டுப்படுத்த வேண்டும். மன அழுத்தத்தைக் குறைக்க ஆழ்ந்த சுவாசம், தியானம் செய்ய வேண்டும்.
இந்த மாற்றங்கள் 6-70 சதவீத மக்களில் அமிலத்தன்மை மற்றும் வாயு பிரச்னையில் தெளிவான முன்னேற்றத்தை ஏற்படுத்துகின்றன என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். அடிக்கடி ஏற்படும் வாயு மற்றும் அமிலத்தன்மை உடலில் ஏதோ பிரச்சனை இருக்கிறது என்பதற்கான அறிகுறிதான். சரியான நேரத்தில் என்ன பிரச்சனை என்று கண்டறிந்து அதற்கான சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.
