திரையரங்கில் வெளியான பிறகு ரசிகர்களை கவரும் வகையில் வாரந்தோறும் பல படங்கள் ஓடிடியில் ரிலீசாகி வருகின்றன. சில படங்கள் மற்றும் தொடர்கள் நேரடியாகவும் ஓடிடி தளத்தில் வெளியாகும். this week ott release round up
அதன்படி, இந்த வாரம் வெளிவந்துள்ள திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் எந்தெந்த ஓ.டி.டி தளங்களில் வெளியாக உள்ளது என்பதை இங்கு காணலாம்.
லால் சலாம்
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியான திரைப்படம் ‘லால் சலாம்’. அதன்பிறகு ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சனை காரணமாக இப்படம் ஓடிடியில் வெளியாவது தாமதமாகி வந்தது. இந்த நிலையில் சுமார் ஒன்றரை வருடங்களுக்கு பிறகு இப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் இன்று வெளியானது. கிரிக்கெட்டை மையமாக கொண்ட இந்த திரைப்படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் ஆகியோர் நடித்துள்ளனர். சிறப்பு தோற்றத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வடக்கன்
சஜீத் ஏ இயக்கத்தில் ஆடுகளம் கிஷோர், ஸ்ருதி மேனன் நடிப்பில் கடந்த மார்ச் வெளிவந்தது ’வடக்கன்’ என்ற மலையாளத் திரைப்படம். சூப்பர் நேச்சுரல் த்ரில்லர் ஜானரில் அமைந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் தற்போது ஆஹா ஓடிடி தளத்தில் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது.

கார்னிகா
திரையரங்குகளில் வெளியாகி கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து, மலையாள மர்மத் திரில்லர் படமான கார்னிகா கடந்த 6 முதல் சிம்பிளி செளத் ஓடிடி தளத்தில் வெளியானது. அருண் வெண்பலா இயக்கிய இப்படத்தில் பிரியங்கா நாயர், வியான், டிஜி ரவி, கிரிஸ் வேணுகோபால் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
சிங்கிள்
முக்கோண காதலை மையமாகக் கொண்டு கார்த்திக் ராஜு இயக்கத்தில், ஸ்ரீ விஷ்ணு, இவானா மற்றும் கேட்டிகா சர்மா ஆகியோர் நடிப்பில் வெளியான காதல் நகைச்சுவைத் திரைப்படம் ‘சிங்கிள்’. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வரவேற்பை பெற்ற இப்படம் தற்போது அமேசான் பிரைம் வீடியோவில் தெலுங்கு, இந்தி, கன்னடம், தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது.
ஜாட்
கோபிசந்த் மல்லினேனி இயக்கத்தில் சன்னி தியோல் நடித்துள்ள படம் ‘ஜாத்’. ஆக்சன் கதைக்களத்தில் உருவான இப்படம் திரையரங்கில் வெளியாகி பெரும் வசூலை குவித்தது. ரெஜினா கசன்ட்ரா, ரம்யா கிருஷ்ணன், ரன்தீப் ஹூடா உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
இவை தவிர இந்த வாரம் ஓடிடியில் வெளியாகியுள்ள படங்கள்…
தெலுங்கு :
ஜிகல் – சன் நெக்ஸ்ட்
டியர் டேடி – ஈடிவி வின்
பெல்லிகானி பிரசாத் – ஈடிவி வின்
தேவிகா மற்றும் டேனி – ஹாட்ஸ்டார்
இந்தி :
பூல்ச்க்மாஃப் – அமேசான் பிரைம்
ஸ்டோலன் – அமேசான் பிரைம்
சால்கப்பாட் தி டிசெப்சன் – ஜீ 5
மலையாளம் :
பட்த் – மனோரமா மேக்ஸ்
ஹாலிவுட் :
Y2K (E) – ஹாட்ஸ்டார்
Code8 (E) – லயன்ஸ் கேட் ப்ளே
Get Away (E) – ஹாட்ஸ்டார்
Straw (E) – நெட்பிளிக்ஸ்
Boys On The Side (E) – நெட்பிளிக்ஸ்
Tires S2 (E) – நெட்பிளிக்ஸ் தொடர்
The Surfer (E) – அமேசான் பிரைம் வீடியோ
The Alto Knights (E) – ஹெச்பிஓ மேக்ஸ்
Resident Alien S4 (E) – ஹாட்ஸ்டார்
Night Court S3 (E) – ஹாட்ஸ்டார் தொடர்
The Survivors (E) – நெட்பிளிக்ஸ் தொடர்
Becoming Led Zeppelin (E) – நெட்பிளிக்ஸ்
Ginny And Georg S3 (E) – நெட்பிளிக்ஸ் தொடர்
Ocean David Attenborough (E) – ஹாட்ஸ்டார்
Power Moves With Shaquille ONeal (E) – நெட்பிளிக்ஸ்
OutOfControl (பிரெஞ்சு) – பிஎம்எஸ்
KO (பிரெஞ்சு) – நெட்ஃபிக்ஸ்
MercyForNone (கொரியன்) – நெட்பிளிக்ஸ் தொடர்
Hige Forces (சீனம்) – லயன்ஸ் கேட் ப்ளே