டிஜிட்டல் திண்ணை: திருமாவுக்கு 8 சீட்.. என்னாச்சு ராஜ்யசபா சீட்? ஸ்டாலின் முடிவின் பின்னணி என்ன?

Published On:

| By Kavi

வைஃபை ஆன் செய்ததும், “தன்னலமற்ற சிந்தை தன்னேரில்லாதது”என வாசித்தபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.

என்னய்யா.. முதுமொழியா? ஏதோ பீடிகை மாதிரி இருக்கே?

ADVERTISEMENT

படிச்சேன்..சொன்னேன்யா.. நாம இன்னைக்கு ஹாட் டாப்பிக்குள்ள போவோம்..

விசிகவுக்கு திமுக கூட்டணியில தமிழ்நாட்டுல 8 சீட் கிடைச்சிருக்கு.. புதுச்சேரியில 1 சீட் கொடுத்திருக்காங்க.. ஸ்டாலினும் திருமாவும் இன்னைக்கு ஒப்பந்தத்துல கையெழுத்து போட்டிருக்காங்க..

ADVERTISEMENT

ஸ்டாலினை திருமா ஏற்கனவே சந்திச்சு பேசுனது என்னான்னு நேத்து நாம டிஜிட்டல் திண்ணையில ரொம்ப விரிவாகவே சொல்லி இருந்தோம்..

இன்னைக்கு திருமாவுக்கு 8 சீட் கொடுக்கப்பட்டிருக்கு.. இதை பத்தி ஸ்டாலினுக்கு நெருக்கமான சர்க்கிளில் விசாரிச்சப்ப, “திருமா, டபுள் டிஜிட் சட்டசபை தொகுதியும் 1 ராஜ்யசபா சீட்டும் ஸ்டாலின்கிட்ட கேட்டிருந்தாரு.. இதை பத்தி ஸ்டாலினும் டிஸ்கஷன் செஞ்சாரு..

ADVERTISEMENT

அதுக்கு அப்புறமா விசிகவுக்கு தமிழ்நாட்டுல 7 சட்டசபை தொகுதி, புதுச்சேரியில 1 தொகுதி, 2028-ல் திருமாவளவனுக்கு ராஜ்யசபா சீட்ன்னு ஸ்டாலின் முடிவு செஞ்சு வெச்சிருந்தாரு..

அதாவது திருமா நிற்கிறதா இருந்தா 2028-ல் அவருக்கு ராஜ்யசபா சீட் அப்படிங்கிறதுதான் ஸ்டாலின் முடிவா இருந்துச்சு..

விசிக உயர்நிலைக் குழுவும் நேத்து டபுள் டிஜிட் இடம், ராஜ்யசபா சீட் தரனும் கேட்டு தீர்மானம் போட்டிருந்தாங்க..

இதுக்கு இடையில, தனக்கு ராஜ்யசபா சீட் வாங்கிட்டு கட்சிக்கு 7 தொகுதிகள் வாங்குனா, ”தனக்காக சுயநலமா செஞ்சுகிட்டாரு”ன்னு பேச்சு வரும்னு திருமா தயங்கினாரு.. ஸ்டாலின் கிட்டேயும் ராஜ்யசபா சீட்டை ஏத்துக்கிறதுல இருக்கிற தயக்கத்தையும் சொன்னாரு திருமாவளவன்..

திருமாவோட பெருந்தன்மையை உள்வாங்கிகிட்ட ஸ்டாலின், ராஜ்யசபா சீட்டுக்கு பிரஸ்ஸர் கொடுக்காததால தமிழ்நாட்டுல 8 சீட்டும் புதுச்சேரியில 1 தொகுதியும் மொத்தம் 9 இடங்களை விசிகவுக்கு கொடுத்து மகிழ்விச்சிட்டாரு” என்கின்றனர் என டைப் செய்தபடியே சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆப் லைனுக்குள் போனது வாட்ஸ் ஆப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share