உலகம் முழுவதும் மக்கள் 2026ம் ஆண்டை வரவேற்க தயார் நிலையில் உள்ளனர். இந்நிலையில் உலகில் முதல் முதலாக கிரிபாட்டி தீவில் புத்தாண்டு பிறந்துள்ளது.
உலகம் முழுவதும் ஒரே தேதி முறை பயன்பாட்டில் உள்ள நிலையிலும், புவி சுழற்சி காரணமாக காலநிலை மற்றும் நேரங்கள் மாறுபடுகிறது.
அந்த வகையில் உலகிலேயே முதல் முறையாக 2026ம் ஆண்டு கிரிபாட்டி தீவில் பிறந்துள்ளது. உலகின் கிழக்குக் கோடியில் பசிபிக் கடலில் உள்ள சின்னஞ்சிறு தீவான கிரிபாட்டிதான் (KIRIBATI). இங்கு இந்திய நேரப்படி இங்கு 31ஆம் தேதி மாலை 3.38க்கு புத்தாண்டு பிறந்துள்ளது. கிரிபாட்டி தீவின் கிரிட்டிமதி நகரம் 2026ல் முதல் முறையாக அடியெடுத்து வைத்துள்ளது. கிரிபாட்டி தீவில் உள்ள கிறிஸ்துமஸ் தீவில் ஆங்கிலப் புத்தாண்டு பிறந்த நிலையில் அந்த மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் புத்தாண்டு பிறந்துள்ளது. அங்கும் மக்கள் வாண வேடிக்கைகளுடன் புத்தாண்டை மகிழ்ச்சியாக வரவேற்றனர்.
