தமிழகத்தில் SIR-க்குப் பிறகான வரைவு வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்கள் தங்கள் பெயரைச் சேர்ப்பதற்கு வரும் ஜனவரி 30 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் SIR பணிகள் மேற்கொள்வதற்கு முன் தமிழகத்தில் 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 587 பேர் இருந்தனர். இந்நிலையில், கடந்த டிசம்பர் 19 அன்று வெளியான வரைவு வாக்காளர் பட்டியலின்படி 5 கோடியே 43 லட்சத்து 76 ஆயிரத்து 755 வாக்காளர்கள் உள்ளனர். சுமார் 97.37 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறாதவர்கள் தங்கள் பெயரைச் சேர்ப்பதற்கு தேர்தல் ஆணையம் முதலில் ஜனவரி 18 வரை கால அவகாசம் வழங்கியிருந்தது. நேற்று வரை சுமார் 13 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இந்நிலையில், வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்கள் தங்கள் பெயர்களைச் சேர்க்க வரும் ஜனவரி 30 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
