இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டுள்ள முதல்வர் ஸ்டாலின் பென்னி குயிக் குடும்பத்தினரை சந்தித்துள்ளார்.
முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் முதல்வர் ஸ்டாலின் ஜெர்மனி, பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் லண்டனில் பென்னி குயிக் குடும்பத்தினரை முதல்வர் சந்தித்துள்ளார். அப்போது பென்னி குயிக் சிலையை அவரது சொந்த ஊரான கேம்பர்ளியில் நிறுவியதற்கு அரச குடும்பத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.
இது குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில்,”முல்லை பெரியாறு அணையைத் தந்து நம் மக்களின் மனங்களில் நிறைந்து வாழும் கர்னல் ஜான் பென்னிகுயிக் அவர்களது சிலையை, அவரது சொந்த ஊரான கேம்பர்ளி நகரில் நிறுவியதற்காக, அவரது குடும்பத்தினரும் – செயிண்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தைச் சார்ந்தவர்களும் நன்றி தெரிவித்தனர்.
நேரில் அவர்கள் வைத்த கோரிக்கைகளையும் பரிசீலித்து நிறைவேற்றுவோம்.
வாழ்க பென்னி குயிக் அவர்களது புகழ்!” என தெரிவித்துள்ளார்.