‘கலைஞர் கனவு இல்லம்’… பட்ஜெட்டில் சூப்பர் அப்டேட்!

Published On:

| By Selvam

2025- 2026-ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (மார்ச் 14) தாக்கல் செய்து வருகிறார். Thangam thennarasu kalaignar illam

ஊரக வளர்ச்சிக்கான புதிய திட்டங்களை வெளியிட்டு தங்கம் தென்னரசு பேசும்போது, “ஓலைக் குடிசைகளில் வசிக்கும் ஏழைக் குடும்பங்கள் குறித்து கலைஞர் கொண்டிருந்த குடிசையில்லா தமிழ்நாடு அமைந்திடவேண்டும் என்ற அவரது பெருங்கனவையும் நினைவுகூறும் வகையில், கடந்த ஆண்டு ‘கலைஞரின் கனவு இல்லம்’ எனும் புதியதிட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

வரும் 2030 ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரும் நோக்கத்துடன், சென்ற ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு லட்சம் புதிய வீடுகள் கட்டும் பணிகள், அனைத்து மாவட்டங்களிலும் விரைவாக நடைபெற்று வருகின்றன. அதைத் தொடர்ந்து, 2025-26 ஆம் ஆண்டில் ஒரு லட்சம் புதிய வீடுகள் 3,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டும் பணிகள் தொடங்கப்படும்.

தமிழ்நாட்டில் கடந்த 2001 ஆம் ஆண்டிற்கு முன்னர் பல்வேறு அரசுத் திட்டங்களின் கீழ் ஊரகப் பகுதிகளில் வாழும் விளிம்புநிலை மக்களுக்காகக் கட்டப்பட்டு, தற்போது சீரமைக்க முடியாமல் மிகவும் பழுதடைந்த வீடுகளுக்கு மாற்றாக, புதிய வீடுகளை கட்டித் தர இந்த அரசு முடிவு செய்துள்ளது. 2025-26 ஆம் ஆண்டில், இத்திட்டத்தின் கீழ் 25 ஆயிரம் புதிய வீடுகள் 600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டித் தரப்படும்” என்று தெரிவித்தார். Thangam thennarasu kalaignar illam

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share