தைப்பூசம்… எந்தெந்த ரூட்களில் ஸ்பெஷல் பஸ் இயக்கம்?

Published On:

| By Selvam

இந்த ஆண்டு தைப்பூசம் பிப்ரவரி 11-ம் தேதி அனைத்து முருகன் கோயில்களிலும் கொண்டாடப்படுகிறது. மேலும், வளர்பிறை முகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

பிப்ரவரி 8 (இரண்டாவது சனிக்கிழமை), பிப்ரவரி 9 (ஞாயிற்றுக்கிழமை) வார விடுமுறை நாள்களாகவும் பிப்ரவரி 10 முகூர்த்த நாள் மற்றும் பிப்ரவரி 11 தைப்பூசத்தை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதைக் கருத்தில்கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்புப் பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு பிப்ரவரி 7 (வெள்ளிக்கிழமை) அன்று 380 பேருந்துகள் இயக்கப்படும். பிப்ரவரி 8 (சனிக்கிழமை) 530 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. Thaipusam Special Buses

சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு பிப்ரவரி 7 வெள்ளிக்கிழமை அன்று 60 பேருந்துகளும் பிப்ரவரி 8 சனிக்கிழமை அன்று 60 பேருந்துகளும் பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய பல்வேறு இடங்களுக்கும் 250 சிறப்புப் பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மாதவரத்திலிருந்து பிப்ரவரி 7 அன்று 20 பேருந்துகளும் பிப்ரவரி 8 அன்று 20 பேருந்துகள் சிறப்புப் பேருந்துகளாக இயக்கப்படுகிறது.

மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share