பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் அடுத்தடுத்து ‘வேட்டை’.. மர்ம நபர்களால் ‘லஷ்கர்’ தளபதி சைஃபுல்லா சுட்டுக் கொலை!

Published On:

| By Minnambalam Desk

Lashkar-e-Taiba Terrorist

பாகிஸ்தானில் லஷ்கர் இ தொய்பாவின் முக்கிய தளபதிகளில் ஒருவரான சைஃபுல்லா என்ற காலித், அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பயங்கரவாதிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. Lashkar Commander Saifullah Shot Dead

இந்தியாவில் தாக்குதல்களை நடத்தும் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளின் தளபதிகள் அடுத்தடுத்து மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டு வருகின்றனர். சர்வதேச பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தின் வலது, இடது கரங்களும் இதே பாணியில் ஏற்கனவே சுட்டுக் கொல்லப்பட்டனர்.

தற்போது லஷ்கர் இ தொய்பா இயக்கத்தின் முக்கிய தளபதியான சைஃபுல்லா என்ற காலித், அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். நேபாளத்தில் பதுங்கி இருந்து செயல்படும் லஷ்கர் தீவிரவாத கும்பலுக்கு தலைவராக இருந்தவர்தான் இந்த சைஃபுல்லா என்ற காலித். Operation Sindoor ராணுவ நடவடிக்கையில் அழிக்கப்பட்ட பயங்கரவாத இயக்கத்தின் தலைமை நிலையத்தில் பயிற்சியாளராகவும் இருந்தவர் சைஃபுல்லா.

இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். இயக்க தலைமை அலுவலகம் மீதான தாக்குதல், ஜம்மு காஷ்மீர் ராம்பூர் ராணுவ முகாம் மீதான தாக்குதல்களின் மூளையாகவும் செயல்பட்டதும், தற்போது சுட்டுக் கொல்லப்பட்ட சைஃபுல்லா என்ற காலித். என்கின்றன பாதுகாப்பு துறை வட்டாரங்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share