ADVERTISEMENT

CBSE 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் எப்போது தொடங்கும்?

Published On:

| By Mathi

CBSE Exams

CBSE – சிபிஎஸ்இ பாடத்திட்டன் கீழான 10, 12-ம் வகுப்புகளுக்கு உத்தேசமாக பிப்ரவரி 17-ந் தேதி பொதுத் தேர்வுகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் அடிப்படையிலான பள்ளிகள், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகளில் படிக்கும் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் எப்போது நடத்தப்படும் என்பது தொடர்பான உத்தேச அறிவிப்பை சிபிஎஸ்இ நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT

சிபிஎஸ்இ தேர்வுகள் கட்டுப்பாட்டாளர் சன்யம் பரத்வாஜ் வெளியிட்ட அறிக்கையில், சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத்தேர்வின் முதல் கட்டம் 2026-ம் ஆண்டு பிப்ரவரி 17-ந் தேதி தொடங்கி மார்ச் 6-ந் தேதி வரை நடத்தப்படும்; 2-வது கட்டமாக மே 15 முதல் ஜூன் 1 வரை நடத்தப்படும்; 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு பிப்ரவரி 17-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 9-ந் தேதி வரை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share