இயல்பை விட வெப்பம் அதிகரிக்கும் : வானிலை அப்டேட்!

Published On:

| By Kavi

தமிழகத்தில் கோடைகாலம் தொடங்கியிருக்கும் நிலையில்,  இயல்பை விட வெப்பம் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம்  கூறியுள்ளது. 

தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவி வருகிறது.  கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வேலூரில்  37.9° செல்சியல் வெயில் பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக கொடைக்கானலில் 7.1° செல்சியல் வெயில் பதிவாகியுள்ளது. 

ADVERTISEMENT

இந்தநிலையில் அடுத்து வரும் நாட்களில்  வெப்பம்  அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 

இதுகுறித்து இன்று (மார்ச் 4) வெளியிட்ட அறிவிப்பில்,  “மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

ADVERTISEMENT

தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பூமத்தியரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

04-03-2026 முதல் 06-03-2026 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.

ADVERTISEMENT

மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென்தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
.
பனிமூட்டம் பற்றிய முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை
05-03-202 & 06-03-2026: மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்கள், தமிழக கடலோர பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும்.

அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு

04-03-2026 முதல் 06-03-2026 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும்.

இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு

04-03-2026 முதல் 08-03-2026 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டி இருக்கக்கூடும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share