சென்னையில் இன்று (மார்ச் 4) ஒரு கிராம் தங்கம் ரூ.265 வரை சரிவை சந்தித்துள்ளது.
சர்வதேச சந்தை நிலவரம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் மற்றம் வெள்ளி விலை அவ்வப்போது ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில் இன்று ஒரு கிலோ வெள்ளி அதிரடியாக ரூ.20,000 வரை குறைந்துள்ளது.
இன்றைய தங்கம் விலை
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ. 265 குறைந்து ரூ. 15,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ. 2,120 குறைந்து ரூ. 1,21,600க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதே போல் 18 கேரட் தங்கம் ரூ. 150 குறைந்து ரூ. 13,100க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய வெள்ளி விலை
ஏழைகளின் தங்கம் என அழைக்கப்படும் வெள்ளி இன்று ரூ. 20 குறைந்து ரூ. 295க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல் ஒரு கிலோ பார் வெள்ளி ரூ. 20,000 குறைந்து ரூ.2,95,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 10 நாட்களில் தங்கம் விலை நிலவரம்
| 3-3-2026 | 1,23,720 |
| 2-3-2026 | 1,25,280 |
| 1-3-2026 | 1,26,200 |
| 28-2-2026 | 1,24,400 |
| 27-2-2026 | 1,19,200 |
| 26-2-2026 | 1,19,360 |
| 25-2-2026 | 1,19,440 |
| 24-2-2026 | 1,19,120 |
| 23-2-2026 | 1,18,880 |
| 22 -2-2026 | 1,17,440 |
கடந்த 10 நாட்களில் வெள்ளி விலை நிலவரம்
| 2-3-2026 | 315 |
| 2-3-2026 | 315 |
| 1-3-2026 | 325 |
| 28-2-2026 | 320 |
| 27-2-2026 | 295 |
| 26-2-2026 | 295 |
| 25-2-2026 | 295 |
| 24-2-2026 | 290 |
| 23-2-2026 | 300 |
| 22-2-2026 | 290 |
