“மீண்டும் ஒரு வாய்ப்பு” : ஆசிரியர் தேர்வு வாரியம் முக்கிய அறிவிப்பு!

Published On:

| By Kavi

Teacher Recruitment Board new announcement

இடைநிலை ஆசிரியர் பணிக்கான தேர்வை எழுதியவர்களுக்கு டிஆர்பி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. Teacher Recruitment Board new announcement

கடந்த ஆண்டு டிஆர்பி மூலம் நடைபெற்ற இடைநிலை ஆசிரியர் பணிக்கான தேர்வை  25,319 பேர் எழுதினர். இதில் இடைநிலை ஆசிரியர் தேர்விற்கு பணிநாடுநர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு போட்டித்தேர்வு 21.07.2024 அன்று நடத்தப்பட்டு சான்றிதழ் சரிபார்த்தலுக்கான பட்டியல் 30.04.2025 அன்று வெளியிடப்பட்டது.

இந்நிலையில், சில பணிநாடுநர்களிடமிருந்து இணையவழி விண்ணப்பம் சமர்ப்பிக்கும் போது தவறான விவரங்களை குறிப்பிட்டதாகவும், தற்போது அதனை சரிசெய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளன.

இந்தசூழலில்  ஆசிரியர் தேர்வு வாரியம் முக்கிய அறிவிப்பை மே 5 ஆம் தேதி வெளியிட்டுள்ளது. 

அதில்,  “இடைநிலை ஆசிரியர் நேரடி நியமனம் 2024 ற்கு விண்ணப்பித்து தேர்ச்சி பெற்றுள்ள பணிநாடுநர்களில் எவரேனும் விண்ணப்பத்தில் ஏதேனும் தவறான விவரங்களை தெரிவித்திருந்தால் அதனை சரி செய்வதற்கான வாய்ப்பு மீண்டும் அளிக்கப்படுகிறது.

திருத்தம் கோருவதற்கான கையொப்பமிட்ட கோரிக்கை மனுவினை கோரிக்கைகுரிய ஆதாரச் சான்றிதழ்களுடன் இவ்வாரியத்தின் இணையவழி குறைதீர் மின்னஞ்சல் trbgrievances@tn.gov.in என்ற முகவரிக்கு அல்லது இவ்வாரியத்தில் செயல்படும் குறைதீர் பிரிவில் நேரடியாக 08.05.2025 மாலை 5.00 மணிக்குள் வழங்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், 08.05.2025 மாலை 5.00 க்கு பின்னர் பெறப்படும் கோரிக்கை மனுக்கள் இவ்வாரியத்தால் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது எனவும் ஏற்கனவே கொடுக்கப்பட்ட விண்ணப்பத்தில் தெரிவித்துள்ள தகவல்கள் அடிப்படையில் இறுதி முடிவு எடுக்கப்படும்” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Teacher Recruitment Board new announcement

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share