“ஐடி கம்பெனி வேலைனாலே இன்ஜினியரிங் படிச்சவங்களுக்கு மட்டும்தானா? நாங்க ஆர்ட்ஸ் & சயின்ஸ் படிச்சது ஒரு குத்தமா?” என்று ஆதங்கப்படும் மாணவர்களுக்கு… இதோ ஒரு ‘மாஸ்’ அப்டேட்!
இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான டிசிஎஸ் (TCS), கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுக்காகவே பிரத்யேகமாக ‘TCS B.Sc Ignite & Smart Hiring’ என்ற திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது சும்மா ஒரு வேலை இல்லைங்க, படிக்கும்போதே பெரிய ஐடி நிறுவனத்தில் நுழையும் ஒரு தங்கமான வாய்ப்பு!
என்ன வேலை? என்ன சிறப்பு?
இந்த ஆட்சேர்ப்பு இரண்டு பிரிவுகளாக நடைபெறுகிறது:
- TCS B.Sc Ignite: இதில் தேர்வாகும் மாணவர்களுக்குச் சாஃப்ட்வேர் இன்ஜினியரிங், செயற்கை நுண்ணறிவு (AI), கிளவுட் (Cloud), பிளாக்செயின் (Blockchain) போன்ற அதிநவீன தொழில்நுட்பங்களில் பயிற்சி அளிக்கப்படும். அதுமட்டுமல்ல, இந்தியாவின் முன்னணிப் பல்கலைக்கழகங்களில் முதுகலை (PG) பட்டம் படிப்பதற்கான வாய்ப்பையும் டிசிஎஸ் வழங்குகிறது.
- TCS Smart Hiring: இந்தப் பிரிவில் தேர்வாகும் மாணவர்கள், டிசிஎஸ் நிறுவனத்தின் பல்வேறு திட்டங்களில் டெக்னோ-ஃபங்ஷனல் (Techno-Functional) ரோல்களில் பணியமர்த்தப்படுவார்கள்.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
- கல்வித் தகுதி: பி.சி.ஏ (BCA), பி.எஸ்சி (B.Sc – IT, Computer Science, Maths, Data Science, Statistics, Physics, Chemistry, Electronics, Cyber Security, Biochemistry) அல்லது பி.வோக் (B.Voc – CS/IT) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- பேட்ச் (Batch): 2025 மற்றும் 2026ஆம் ஆண்டுகளில் கல்லூரியில் படித்து முடிப்பவர்கள் (Final Year Students) இதற்குத் தகுதியானவர்கள்.
- அரியர் (Arrears): விண்ணப்பிக்கும்போது ஒரு அரியர் இருக்கலாம். ஆனால் பணியில் சேர்வதற்குள் அதை க்ளியர் செய்திருக்க வேண்டும்.
- முக்கியக் குறிப்பு: இன்ஜினியரிங் (B.E/B.Tech) மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்க முடியாது!
தேர்வு முறை எப்படி?
தேர்வு ஆன்லைனில் நடக்காது, நேரில் சென்று தேர்வு மையங்களில் (In-Centre Test) எழுத வேண்டும்.
- பாடத்திட்டம்: நியூமெரிக்கல் எபிலிட்டி (Numerical Ability), வெர்பல் எபிலிட்டி (Verbal Ability), ரீசனிங் (Reasoning) மற்றும் கோடிங் (Coding – Optional).
விண்ணப்பிப்பது எப்படி?
டிசிஎஸ் நெக்ஸ்ட் ஸ்டெப் (TCS NextStep) இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
- கடைசித் தேதி: ஜனவரி 11, 2026.
- தேர்வு மையங்கள் ‘First Come First Serve’ அடிப்படையில் ஒதுக்கப்படும். எனவே, எவ்வளவு சீக்கிரம் அப்ளை பண்றீங்களோ, அவ்வளவு நல்லது!
தம்பிங்களா, தங்கச்சிங்களா… வழக்கமா ஐடி வேலைனாலே இன்ஜினியரிங் படிச்சவங்களுக்குத் தான் முன்னுரிமை கொடுப்பாங்க. ஆனா, டிசிஎஸ் நிறுவனம் திறமை இருந்தா டிகிரி முக்கியமில்லைன்னு நிரூபிக்கும் விதமா இந்த வாய்ப்பைக் கொடுத்திருக்கு. குறிப்பா, பி.எஸ்சி மேக்ஸ், பிசிக்ஸ் படிச்சவங்க கூட ஐடி ஃபீல்டுல சாதிக்க இது ஒரு செம்ம பிளாட்ஃபார்ம்.
இன்னொரு விஷயம், தேர்வு மையத்தைத் தேர்ந்தெடுக்கும்போது கவனமா இருங்க. ஒருமுறை செலக்ட் பண்ணிட்டா மாத்த முடியாது. ஜனவரி 11 வரைக்கும் டைம் இருக்குனு நினைக்காதீங்க. கடைசி நேரத்துல சர்வர் ஸ்லோ ஆகிடும், அல்லது பக்கத்துல இருக்கிற எக்ஸாம் சென்டர் நிரம்பிடும். அதனால இப்பவே அப்ளை பண்ணி, உங்க கேரியரை ஸ்டார்ட் பண்ணுங்க!
