வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்… எப்போது தெரியுமா?

Published On:

| By Selvam

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்றம் செய்வதற்காக நவம்பர் மாதம் நான்கு நாட்கள் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கும் எழுதியுள்ள கடிதத்தில், “நவம்பர் 9, 10, 23, 24 ஆகிய தேதிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்கள் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் நடத்தப்படும்.

ADVERTISEMENT

இந்த முகாம்களில் 2025 ஜனவரி 1 அன்று 18 வயது நிரம்பியவர்கள் புதிய வாக்காளர் அட்டை பெற விண்ணப்பிக்கலாம். புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நடைபெற உள்ளது. இதற்கு தேவையான அளவு படிவங்களை வைத்திருக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT

இறுதி வாக்காளர் பட்டியலானது 2025-ஆம் ஆண்டு ஜனவரி 6-ஆம் தேதி வெளியிடப்படும் என்று சத்தியபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

செல்வம்

ADVERTISEMENT

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

விஜய் சேதுபதிக்கு பிக் பாஸ் வைத்த செக்!

யூடியூப் கிரியேட்டர்ஸ்களுக்கு குட் நியூஸ்: இனிமேல் ஷார்ட்ஸ் வீடியோ 3 நிமிஷம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share