யூடியூப் ஷார்ட்ஸ் வீடியோக்களின் நீளத்தை 60 நொடிகளில் இருந்து மூன்று நிமிடங்களாக அதிகரிக்க உள்ளதாக யூடியூப் நிறுவனம் அறிவித்துள்ளது.
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் தலமாக யூடியூப் உள்ளது. இதில் சினிமா, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு என அனைத்து விதமான வீடியோக்களும் உள்ளது.
யூடியூபை பொறுத்தவரை லாங் ஃபார்மட் மற்றும் ஷார்ட் ஃபார்மட் என இரண்டு விதமான வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்படுகிறது.
இதில் ஷார்ட்ஸ் எனப்படும் 60 நொடிகள் நீளம் மட்டுமே கொண்ட வீடியோக்கள் மிகவும் பிரபலம். நேரம் குறைவு என்பதால் பலராலும் ஷார்ட்ஸ் வீடியோக்கள் விரும்பி பார்க்கப்படுகிறது.
அதேவேளையில், ஒரு செய்தியை முழுமையாக சொல்ல முடியவில்லை, வித்தியாசமாக வீடியோ பதிவேற்றம் செய்ய முடியவில்லை, அதனால் இந்த 60 நொடிகள் என்பது தங்களுக்கு போதுமானதாக இல்லை என்று யூடியூப் கிரியேட்டர்ஸ் பலரும் புலம்பி வந்தனர்.
அவர்களுக்கு தற்போது குட் நியூஸ் கிடைத்துள்ளது. அதாவது வரும் அக்டோபர் 15-ஆம் தேதி முதல் யூடியூபில் மூன்று நிமிடங்கள் வரை ஷார்ட்ஸ் பதிவேற்றம் செய்யலாம் என்று அறிவித்துள்ளனர். இதனால் யூடியூப் கிரியேட்டர்ஸ் குஷியாகியுள்ளனர். இதற்கான வேலைகளில் யூடியூப் நிறுவனம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இதுதொடர்பான முழுமையான விவரங்கள் அடங்கிய அறிவிப்பை யூடியூப் விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
விஜய் குட்டி திராவிட மாடலை உருவாக்குகிறார்: தமிழிசை விமர்சனம்!
அதிமுக 53-ஆம் ஆண்டு தொடக்க விழா: எடப்பாடி முக்கிய அறிவிப்பு!