முதல்வரின் பாதுகாப்பு எஸ்.பி.க்கு பதவி உயர்வு!

Published On:

| By christopher

tamilnadu cm security sp promotes as dig

தமிழ்நாடு முதல்வரின் பாதுகாப்பு காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த ஆர்.திருநாவுக்கரசு ஐபிஎஸ் தற்போது காவல் நுண்ணறிவுப்பிரிவின் டிஐஜியாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

வரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக தமிழகம் முழுவதும் 48 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு இன்று (ஜனவரி 7) உத்தரவிட்டுள்ளது. அதில் 16 ஐபிஎஸ் அதிகாரிகள் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

ADVERTISEMENT

அதன்படி மகளிர் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு கூடுதல் டிஜிபியாக ஆர்.தமிழ்சந்திரன் ஐபிஎஸ் பதவி உயர்வு பெற்றுள்ளார்.

சென்னை காவல்துறை நடவடிக்கை பிரிவு ஐஜியாக வி.ஜெயஸ்ரீ ஐபிஎஸ் பதவி உயர்வு பெற்றுள்ளார்.

ADVERTISEMENT

சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு ஐஜியாக சாமுண்டீஸ்வரி ஐபிஎஸ் பதவி உயர்வு பெற்றுள்ளார்.

சென்னையில் ஆயுதப்படை பிரிவு ஐஜியாக எஸ்.லஷ்மி ஐபிஎஸ் பதவி உயர்வு பெற்றுள்ளார்.

ADVERTISEMENT

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரிய செயலாளராக எஸ்.ராஜேஸ்வரி ஐபிஎஸ் பதவி உயர்வு பெற்றுள்ளார்.

ஆவடி தலைமையகம் போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையராக  எஸ்.ராஜேந்திரன் ஐபிஎஸ் பதவி உயர்வு பெற்றுள்ளார்.

தமிழ்நாடு காவல்துறை அகாடமி கூடுதல் இயக்குநராக எம்.எஸ்.முத்துசாமி ஐபிஎஸ் பதவி உயர்வு பெற்றுள்ளார்.

அமலாக்கத்துறை ஐஜியாக என்.எம்.மயில்வாகனன் ஐபிஎஸ் பதவி உயர்வு பெற்றுள்ளார்.

மகளிர் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு துணை டிஐஜியாக பி.ஆர். வெண்மதி  ஐபிஎஸ் பதவி உயர்வு பெற்றுள்ளார்.

வேலூர் சரக டிஐஜியாக சரோஜ் குமார் தாகூர் ஐபிஎஸ் பதவி உயர்வு பெற்றுள்ளார்.

சென்னை தெற்கு போக்குவரத்து காவல்துறை கூடுதல் ஆணையராக டி.மகேஷ்குமார் ஐபிஎஸ் பதவி உயர்வு பெற்றுள்ளார்.

சென்னை வடக்கு போக்குவரத்து காவல்துறை கூடுதல் ஆணையராக என்.தேவராணி ஐபிஎஸ் பதவி உயர்வு பெற்றுள்ளார்.

சேலம் சரக டிஐஜியாக இ.எஸ்.உமா ஐபிஎஸ் பதவி உயர்வு பெற்றுள்ளார்.

காவல் நுண்ணறிவுப்பிரிவின் டிஐஜியாக ஆர்.திருநாவுக்கரசு ஐபிஎஸ் பதவி உயர்வு பெற்றுள்ளார்.

சென்னை கடலோர பாதுகப்பு குழு டிஐஜியாக ஆர். ஜெயந்தி ஐபிஎஸ் பதவி உயர்வு பெற்றுள்ளார்.

சென்னை ரயில்வே டிஐஜியாக ஜி.ராமர் ஐபிஎஸ் பதவி உயர்வு பெற்றுள்ளார்.

இதேபோன்று ராதிகா, ஜெயா கெளரி, ரூபேஷ் குமார் மீனா, விஜயகுமார் உள்ளிட்ட 32 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

கிருஷ்ணகிரி மாவட்ட திமுகவை காலிசெய்யும் அதிமுக-பாஜக….காரணம் யார்?

’அயலான்’ இந்த ஹாலிவுட் படத்தின் காப்பியா?

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share