ADVERTISEMENT

அண்ணா நினைவு நாள்: ’தமிழர் மனசாட்சி’ அண்ணாதான் ஆள்கிறார்.. முதல்வர் மு.க. ஸ்டாலின்

Published On:

| By Mathi

Anna

தமிழக முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 57-வது நினைவு நாளை முன்னிட்டு, திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “பேரறிஞர் அண்ணா தமிழர்களின் மனசாட்சி!நினைவுநாளில் மட்டுமல்ல, ஒவ்வொரு நாளும் அண்ணனை நினைக்கும் நாள்தான் எங்களுக்கு!

ADVERTISEMENT

அண்ணா சாலை, அண்ணா சிலைகள், அண்ணா மேம்பாலம், அண்ணா நூலகம், அண்ணா பேருந்து நிலையங்கள் என அண்ணா பெயர்சூட்டிய தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் அவரே நிறைந்திருக்கும்படி செய்தது கழக அரசு.

மொழித் திணிப்பு – பண்பாட்டுத் திணிப்பு – நிதி நெருக்கடி என்றெல்லாம் வஞ்சகங்களைச் செய்துகொண்டு, துரோகிகளையெல்லாம் துணைக்கு அழைத்துக் கொண்டு வந்தாலும், பா.ஜ.க. அரசின் ஆணவத்துக்கும் ஆதிக்கத்துக்கும் அண்ணாவின் தமிழ்நாட்டில் #GetOut-தான்!

ADVERTISEMENT

ஆண்டுகள் எத்தனை ஆனாலும், தமிழ்நாட்டை அண்ணாதான் ஆள்கிறார்!” என தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share