பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அங்கீகரிக்கப்படாத அரசு ஊழியர் சங்கங்கள் இன்று பிப்ரவரி 3-ந் தேதி வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளன.
பழைய ஓய்வூதியத் திட்டத்துக்கு இணையான ஓய்வூதியத் திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதனை அரசு ஊழியர் சங்கங்கள் ஏற்றுக் கொண்டன.
அதே நேரத்தில் அங்கீகரிக்கப்படாத அரசு ஊழியர் சங்கத்தினர், பழைய ஓய்வூதியத் திட்டத்தையே அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இந்த சங்கத்தினர் 21 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து இன்று தமிழ்நாடு முழுவதும் வேலை நிறுத்தப் போராட்டம், மாவட்ட ஆட்சியர் முற்றுகைப் போராட்டங்களை நடத்த இருப்பதாக அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் முருகானந்தம் அனுப்பிய சுற்றறிக்கையில், இன்று பணிக்கு வராத அரசு ஊழியர்களின் சம்பளத்தை பிடித்தம் செய்ய வேண்டும்; எந்த அரசு ஊழியருக்கும் இன்று தற்செயல் விடுப்பு அனுமதி இல்லை என தெரிவித்துள்ளார்.
