இதுதான் முதல்முறை… சுற்றுலாத்துறை சூப்பர் அறிவிப்பு!

Published On:

| By Selvam

தமிழக அரசு சுற்றுலாத்துறை சார்பில், பயண சந்தை நடத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது. Tamil Nadu tourism department

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்நாடு சுற்றுலாத்துறை முதல் முறையாக தமிழ்நாடு பயண சந்தை – 2025 மார்ச் 21 முதல் 23 வரை நடத்தவுள்ளது. இந்த பயண சந்தையில் சுமார் 100-க்கும் மேற்பட்ட சட்டழல்கள் அமைக்கப்பெற்று மாநிலத்தின் வளமான, மாறுபட்ட சுற்றுலா வாய்ப்புகளை வெளிப்படுத்தவும், சுற்றுலா தொழில் வளர்க்கவும், சுற்றுலாத்துறை முதலீடுகளை ஈர்க்கவும் இந்நிகழ்வு ஒரு முதன்மை தளமாக செயல்படும்.

இந்த நிகழ்வில், பயண ஏற்ப்பாட்டாளர்கள், பயண முகவர்கள், விருந்தோம்பல் வல்லுநர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் உள்ளிட்ட உள்நாடு மற்றும் சர்வதேச சுற்றுலா தொழில் முனைவோர் மற்றும் பங்குதாரர்களை ஒன்றினைத்து மாநிலத்தின் விரிவான சுற்றுலா வாய்ப்புகளை கண்டறியப்படும்.

பாரம்பரிய சுற்றுலா, சுற்றுச்சூழல் சுற்றுலா, ஆரோக்கிய சுற்றுலா மற்றும் கூட்டங்கள், ஊக்கத்தொகைகள், மாநாடுகள் மற்றும் கண்காட்சிகள் (MICE) போன்ற முக்கிய பிரிவுகளில் வளர்ந்து வரும் போக்குகள், பிராந்திய மேம்பாட்டு முயற்சிகள் மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் குறித்த ஈர்க்கும் வண்ணம் இந்த நிகழ்வு வழிவகுக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Tamil Nadu tourism department

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share