தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று பிப்ரவரி 23 வெளியிடப்படுகிறது. தமிழக வாக்காளர்கள் எண்ணிக்கை 5.65 கோடியாக இருக்கும் என்பது எதிர்பார்ப்பு.
இந்திய தேர்தல் ஆணையம், வாக்காளர் சிறப்பு திருத்தத்தை மேற்கொண்டது. இதனடிப்படையில் தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் இருந்து 97.37 லட்சம் பேர் நீக்கப்பட்டனர்.
இதில்
26,95,672 லட்சம் பேர் உயிரிழந்தவர்கள்
66,44,881 லட்சம் பேர் இடம் பெயர்ந்தோர்
3,98,278 லட்சம் பேர் இரட்டை வாக்காளர்கள்.
இதனையடுத்து வரைவு வாக்காளர் பட்டியல் சேர்க்கையில் திருத்தங்கள் மேற்கொள்ள விண்ணப்பங்கள் பெறப்பட்டன. கடந்த டிசம்பர் 19-ந் தேதி முதல் பிப்ரவரி 10-ந் தேதி இந்த விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
இவற்றை பரிசீலனை செய்து இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. தமிழகத்தில் 5.65 கோடி வாக்காளர்கள் இந்த வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெறக் கூடும்.
