தமிழக ரயில்வே திட்டங்கள் தொடர்பான முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்த குற்றச்சாட்டுகளுக்கும் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதிலளித்துள்ளார்.
தமிழகத்தில் ரயில்வே திட்டங்களுக்கு தமிழக அரசு நிலகம் கையகப்படுத்துவதில் ஒத்துழைப்பு தரவில்லை என மத்திய அரசு குற்றம்சாட்டி இருந்தது. இதனை நிராகரித்து பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் அனுப்பி இருந்தார்.
இந்நிலையில் முதல்வர் ஸ்டாலினுக்கு மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதிலளித்துள்ளார்.
இது தொடர்பாக மத்திய அமைச்சர் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளதாவது:
- தமிழக ரயில்வே திட்டங்களுக்கு 2026-27 பட்ஜெட்டில் ரூ.7,611 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
- 2014-க்கு முன்னர் ஒதுக்கப்பட்ட நிதியை விட 8.5 மடங்கு அதிகம்.
- தமிழக ரயில்வே திட்டங்களுக்காக தேவைப்படும் நிலம் 4,326 ஹெக்டேர்.
- தமிழகத்தில் ரயில்வே திட்டங்களுக்கு கையகப்படுத்தப்பட்ட நிலம் 1,052 ஹெக்டேர் மட்டுமே. அதாவது 24 சதவீதம் மட்டும்.
- நிலம் கையகப்படுத்துவதற்காக தமிழக அரசிடம் ரூ.1,465 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது.
