Weather: சென்னை உட்பட பல மாவட்டங்களில் கனமழை- 3 நாட்களுக்கு மஞ்சள் அலர்ட்- ஶ்ரீபெரும்புதூரில் 18 செ.மீ மழை பதிவு!

Published On:

| By Mathi

Tamil Nadu Rain

தமிழகத்தில் சென்னை உட்பட பல மாவட்டங்களில் இன்று காலை (செப்டம்பர் 17) முதல் கனமழை பெய்து வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டம் ஶ்ரீபெரும்புதூரில் 18 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

தென்னிந்திய பகுதிகளின் மீது ஒரு வளிமண்ட மேலடுக்கு சுழற்சி, தென் வங்க கடல் பகுதிகளின் மீது ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகின்றன. இதனால் தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

ADVERTISEMENT

சென்னையில் இன்று அதிகாலை கனமழை கொட்டித் தீர்த்தது. காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் மழை வெளுத்தது. காஞ்சிபுரம் மாவட்டம் ஶ்ரீபெரும்புதூரில் 18 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. சென்னையை அடுத்த மணலி புதுநகரில் 13 செ.மீ. மழை பதிவானது.

சென்னை கொரட்டூர், பாரிமுனையில் 9 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

ADVERTISEMENT

ராமேஸ்வரம், திண்டுக்கல் உட்பட தென் தமிழ்நாட்டிலும் பல பகுதிகளில் கனமழை கொட்டியது.

இன்று கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்

ADVERTISEMENT
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • திருப்பத்தூர்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • சேலம்
  • மயிலாடுதுறை
  • நாகப்பட்டினம்
  • தஞ்சாவூர்
  • திருச்சி
  • புதுக்கோட்டை
  • சிவகங்கை
  • திருச்சி
  • ஈரோடு
  • மதுரை
  • தேனி
  • திண்டுக்கல்
  • நீலகிரி

3 நாட்களுக்கு மஞ்சள் அலர்ட்

தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழைக்கான மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த 3 நாட்களில் 7 செ.மீ. முதல் 11 செ.மீ. மழைக்கான வாய்ப்புள்ளதால் மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share