தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்படும் 100 அரசு பள்ளிகளுக்கு தலா ரூ10 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. Government Schools
பள்ளி கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் அனுப்பிய சுற்றறிக்கையில், 2023-2024ம் ஆண்டு கல்வியாண்டில் சிறந்த பள்ளிக்கான தலைமை ஆசிரியர்கள் தேர்வு பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது. இதில் 100 பள்ளிகள் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன.
சிறந்த பள்ளிகளாக தேர்வு செய்யப்பட்ட 100 அரசு பள்ளிகளுக்கு ஜூலை 6-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை திருச்சியில் நடைபெறும் விழாவில் விருதுகள் வழங்கப்படும். தேர்வான பள்ளிகளுக்கு தலா ரூ10 லட்சம் ஊக்கத் தொகை வழங்கப்படும். இந்த விருதுக்கு தேர்வான பள்ளி தலைமை ஆசிரியர்கள் மீது எந்த ஒழுங்கு நடவடிக்கையும் இல்லை என்பதை உறுதி செய்து அனுப்ப வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.