தமிழக அரசு 2026 ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு ஒவ்வொரு ஆண்டும் முக்கிய நிகழ்வுகளின் நாட்கள், மத நிகழ்வுகளுக்கான பொது விடுமுறை பட்டியலை முன்கூட்டியே வெளியிடும். இதன்படி 2026-ம் ஆண்டுக்கான அரசு பொது விடுமுறை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
- 2026-ம் ஆண்டில் மொத்தம் 24 பொது விடுமுறை நாட்கள்.
- சில விடுமுறைகள் வங்கிகளுக்கு மட்டும் பொருந்தக் கூடியவை
- ஜனவரி மாதம் அதிகபட்சமாக 5 பொதுவிடுமுறை நாட்கள்
- மார்ச், ஏப்ரல், அக்டோபரில் 3 பொது விடுமுறை நாட்கள்
- 2026-ல் தைப்பூசம், தீபாவளி பண்டிகைகள் ஞாயிற்றுக்கிழமைகளில் வருகின்றன.
தமிழ்நாடு அரசு பொதுவிடுமுறை நாட்கள் – 2026
| வரிசை எண் | பொது விடுமுறை | தேதி | கிழமை |
|---|---|---|---|
| 1 | ஆங்கில புத்தாண்டு | 01.01.2026 | வியாழக்கிழமை |
| 2 | பொங்கல் | 15.01.2026 | வியாழக்கிழமை |
| 3 | திருவள்ளுவர் நாள் | 16.01.2026 | வெள்ளிக்கிழமை |
| 4 | உழவர் திருநாள் | 17.01.2026 | சனிக்கிழமை |
| 5 | குடியரசு நாள் | 26.01.2026 | திங்கட்கிழமை |
| 6 | தைப்பூசம் | 01.02.2026 | ஞாயிற்றுக்கிழமை |
| 7 | தெலுங்கு வருடப் பிறப்பு | 19.03.2026 | வியாழக்கிழமை |
| 8 | ரம்ஜான் (Idul Fitr) | 21.03.2026 | சனிக்கிழமை |
| 9 | மகாவீரர் ஜெயந்தி | 31.03.2026 | செவ்வாய்க்கிழமை |
| 10 | வங்கிகளின் கணக்கு முடிவு நாள் )வங்கிகள்/ கூட்டுறவு வங்கிகள்) | 01.04.2026 | புதன்கிழமை |
| 11 | புனித வெள்ளி | 03.04.2026 | வெள்ளிக்கிழமை |
| 12 | தமிழ் புத்தாண்டு / டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் பிறந்த நாள் | 14.04.2026 | செவ்வாய்க்கிழமை |
| 13 | மே நாள் | 01.05.2026 | வெள்ளிக்கிழமை |
| 14 | பக்ரீத் (Idul Azha) | 28.05.2026 | வியாழக்கிழமை |
| 15 | மொகரம் (Yaom-E-Shahadath) | 26.06.2026 | வெள்ளிக்கிழமை |
| 16 | சுதந்திர நாள் | 15.08.2026 | சனிக்கிழமை |
| 17 | மிலாதுன் நபி (Prophet’s Birthday) | 26.08.2026 | புதன்கிழமை |
| 18 | கிருஷ்ண ஜெயந்தி | 04.09.2026 | வெள்ளிக்கிழமை |
| 19 | விநாயகர் சதுர்த்தி | 14.09.2026 | திங்கட்கிழமை |
| 20 | காந்தி ஜெயந்தி | 02.10.2026 | வெள்ளிக்கிழமை |
| 21 | ஆயுத பூஜை | 19.10.2026 | திங்கட்கிழமை |
| 22 | விஜயதசமி | 20.10.2026 | செவ்வாய்க்கிழமை |
| 23 | தீபாவளி | 08.11.2026 | ஞாயிற்றுக்கிழமை |
| 24 | கிறிஸ்துமஸ் | 25.12.2026 | வெள்ளிக்கிழமை |
