IIT கனவு காண்கிற ஸ்டூடன்ட்ஸ்க்கு பெரிய அப்டேட்! மே 17 அன்று JEE அட்வான்ஸ்ட் எக்ஸாம்… ஏப்ரல் 23 முதல் அப்ளிகேஷன் ஓபன்

Published On:

| By Santhosh Raj Saravanan

jee advanced exam 2026 date may 17 application april 23

“IIT-ல படிக்கணும்” — இது பல இன்ஜினியரிங் கனவு காண்ற ஸ்டூடன்ட்ஸ்களின் ultimate goal. அந்த கனவுக்கான முக்கிய கதவு தான் JEE அட்வான்ஸ்ட் எக்ஸாம் (JEE Advanced Exam).

இப்போது 2026 தேர்வுக்கான முக்கிய அப்டேட் வெளியானது. JEE அட்வான்ஸ்ட் 2026 தேர்வு மே 17, 2026 நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும் இந்த தேர்வுக்கு ஆன்லைன் ரெஜிஸ்ட்ரேஷன் ஏப்ரல் 23, 2026 முதல் தொடங்கி மே 2, 2026 வரை நடைபெறும். அதனால் IIT கனவு இருக்கும் ஸ்டூடன்ட்ஸ் இந்த டேட்ஸை நன்றாக செக் பண்ணி அப்ளை பண்ணணும் பாஸ்.

JEE அட்வான்ஸ்ட் 2026 – முக்கிய டேட்ஸ்

  • ரெஜிஸ்ட்ரேஷன் ஸ்டார்ட்: ஏப்ரல் 23, 2026 (காலை 10 மணி)
  • விண்ணப்ப கடைசி தேதி: மே 2, 2026
  • அட்மிட் கார்ட் டவுன்லோடு: மே 11 முதல் மே 17, 2026 வரை
  • எக்ஸாம் டேட்: மே 17, 2026
  • ரிசல்ட் அறிவிப்பு: ஜூன் 1, 2026 (JEE Advanced)

இந்த முழு ப்ராசஸ் அதிகாரப்பூர்வ இணையதளம் jeeadv.ac.in மூலம் நடைபெறும்.

ADVERTISEMENT

யாரெல்லாம் இந்த எக்ஸாம் எழுதலாம்?

JEE அட்வான்ஸ்ட் எழுதுவதற்கு சில முக்கிய கண்டிஷன்ஸ் இருக்கிறது.

  • முதலில் JEE மேன் 2026 தேர்வில் qualify ஆக வேண்டும்
  • நாடு முழுவதும் Top 2.5 லட்சம் ரேங்க் உள்ளவர்கள் மட்டுமே இந்த தேர்வுக்கு அப்ளை செய்ய முடியும்
  • ப்ளஸ் டூ (Physics, Chemistry, Maths) பாடங்களுடன் 2025 அல்லது 2026-ல் எழுதினவர்கள்
  • வயது விதிமுறைப்படி 1 அக்டோபர் 2001 அல்லது அதற்குப் பிறகு பிறந்தவர்கள் eligible (SC/ST/PwDக்கு 5 வருட தளர்வு)

எக்ஸாம் எப்படி நடக்கும்?

JEE அட்வான்ஸ்ட் தேர்வு கம்ப்யூட்டர் பேஸ்டு டெஸ்ட் (CBT) முறையில் நடத்தப்படும்.

ADVERTISEMENT

எக்ஸாம் இரண்டு பேப்பராக இருக்கும்:

  • பேப்பர் 1: காலை 9:00 – 12:00
  • பேப்பர் 2: மதியம் 2:30 – 5:30

இரண்டு பேப்பரும் எழுதினால் தான் final qualification.

இந்த தேர்வு ஏன் முக்கியம்?

இந்த தேர்வு மூலம் தான் இந்தியாவின் 23 IITகளில் B.Tech அட்மிஷன் கிடைக்கும்.

இந்த IITகள் இந்தியாவில் மட்டுமல்ல உலகளவில் மிக உயர்ந்த இன்ஜினியரிங் இன்ஸ்டிட்யூட்ஸ். அதனால் தான் இந்த தேர்வு இந்தியாவில் மிகவும் கடினமான கம்பிடிடிவ் எக்ஸாம்களில் ஒன்று என்று கூறப்படுகிறது.

இதை மறந்துடாதீங்க:

பாஸ், IIT டார்கெட் பண்ணுறீங்கனா இந்த விஷயங்கள் ரொம்ப முக்கியம்:

  • ஏப்ரல் 23 ரெஜிஸ்ட்ரேஷன் டேட், மிஸ் பண்ணிடாதீங்க
  • JEE மேன் ரேங்க் நல்லா இருக்கணும்
  • பிசிக்ஸ், கேமிஸ்ட்ரி, மேத்ஸ் கான்செப்ட்ஸ் ஸ்ட்ராங் ஆக ரெவிஷன் பண்ணுங்க.
  • மாக் டெஸ்ட்ஸ் ரெகுலரா ப்ராக்டிஸ் பண்ணுங்க
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share