திருமண உதவித் திட்டத்துக்காக 43 கிலோ எடை கொண்ட தங்க நாணயங்களை வாங்க தமிழக அரசு டெண்டர் கோரியுள்ளது.
தமிழக அரசு பெண்கள் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில், மூவலூர் ராமாமிர்தம் நினைவு திட்டத்தின் கீழ், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மணமகளுக்கு ரூ.25,000 நிதியுதவியும், எட்டு கிராம் தங்க நாணயமும் வழங்கப்பட்டது.
பட்டம் பெற்ற மணமகளுக்கு இந்த உதவி ரூ. 50,000 ஆக உயர்த்தப்பட்டு வழங்கப்பட்டது. இந்த திட்டம் கடந்த சில ஆண்டுகளாக நிறுத்தப்பட்டாலும், 4 திருமண உதவித் திட்டத்தின் கீழ் தங்க நாணயம் மட்டும் வழங்கப்படுகிறது.
அந்தவகையில், தமிழ்நாடு அரசின் சமூகநலத்துறையால் செயல்படுத்தப்படும் 4 திருமண நிதியுதவித் திட்டங்களுக்கு 5,460 தங்க நாணயங்கள் கொள்முதல் செய்ய தமிழக அரசு டெண்டர் கோரியுள்ளது.
22 கேரட்டில் 8 கிராம் தங்க நகைகள் வாங்க டெண்டர் கோரப்பட்டுள்ளது. இதன் மதிப்பீடு மொத்தம் ரூ.45 கோடி ஆகும்.
இந்த டெண்டருக்கு இன்று(செப்டம்பர் 10) முதல் அக்டோபர் 9ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .
ஒப்பந்தப்புள்ளி படிவத்தினை https://tntenders.gov.in என்ற இணையதளத்திலிருந்து இன்று முதல் அக்டோபர்19ஆம் தேதி பிற்பகல் 01.00 மணி வரை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ஒப்பந்தப்புள்ளி தொடர்பான முன் கூட்டம் செப்டம்பர் 23ஆம் தேதி நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளது.
தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து இன்று ரூ.81,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.