பத்திரப்பதிவு செய்வது ஈஸி… இதை ஃபாலோ பண்ணுங்க!

Published On:

| By Selvam

tamil nadu government introduced

பொதுமக்கள் தங்களது வீடு, நிலம் உள்ளிட்ட சொத்துக்களை பத்திரப்பதிவு செய்ய பத்திர எழுத்தர்கள், வழக்கறிஞர்கள் மூலமாகவே ஆவணங்களை பதிவு செய்யும் நிலை இருந்தது. tamil nadu government introduced

இனிமேல், ஆவண எழுத்தர்கள், வக்கீல்கள் உதவியில்லாமல் பொதுமக்களே பத்திரப்பதிவு செய்யும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

 tamil nadu government introduced

முதலில், பத்திரப்பதிவுத்துறை இணையப்பக்கத்தில் ஆவணங்களின் வகை, தான செட்டில்மென்ட், பாகப்பிரிவினை போன்றவற்றை பதிவு செய்ய வேண்டும். இதனை தொடர்ந்து விற்பவர் பெயர், வாங்குபவர் பெயர், நிலம் அமைந்திருக்கும் பத்திரப்பதிவு அலுவலகம், கிராமம், சர்வே எண், நிலத்தின் அளவு போன்ற உள்ளீடுகளை பதிவு செய்தால் ஆவணம் தானாக உருவாகிவிடும்.

பின்னர், பதிவு செய்பவர் யார் என்ற பகுதியில், ஆவண எழுத்தர், வழக்கறிஞருக்கு பதிலாக சுய பதிவு என்பதனை குறிப்பிட வேண்டும். ஆவணத்திற்கான கட்டணத்தை செலுத்தி நாள், நேரத்தை முடிவு செய்ய வேண்டும். இறுதியாக, ஆவணத்தை சார்பதிவாளர் அலுவகத்தில் கொடுத்து ஆஜராகி பதிவு செய்து கொள்ளலாம்.

இதுதொடர்பாக, பொதுமக்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், 18001025174 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு பத்திரப்பதிவை எளிதாக்கவும், லஞ்சத்தை ஒழிக்கவும் தமிழக அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. tamil nadu government introduced

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share