41 பேரை பலி கொண்ட கரூர் கொடுந்துயரம், 22 குழந்தைகள் உயிரிழப்புக்கு காரணமானகோல்ட்ரிஃப் இருமல் மருந்து விவகாரம் ஆகியவை பரபரப்பாக பேசப்படும் சூழ்நிலையில் தமிழ்நாடு சட்டமன்றம் இன்று கூடுகிறது.
தமிழ்நாடு சட்டமன்றம் இன்று (அக்டோபர் 14) முதல் வரும் வெள்ளிக்கிழமை வரை (அக்டோபர் 17) வரை நடைபெற உள்ளது. தமிழக சட்டமன்ற கூட்டம் மொத்தம் 4 நாட்கள் நடைபெறும்.
6 மாதங்களுக்கு பிறகு நடைபெறும் தமிழக சட்டமன்ற கூட்டத்தில் 41 பேர் பலியான கரூர் கொடுந்துயரம் மற்றும் 22 குழந்தைகள் மரணத்துக்கு காரணமான கோல்ட்ரிஃப் இருமல் மருந்து விவகாரம் உள்ளிட்டவைகளை எதிர்க்கட்சிகள் எழுப்பக் கூடும்.
மேலும் தமிழக சட்டமன்றத்தில் மறைந்த எம்.எல்.ஏக்கள், பிரமுகர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்படும் போது அவர்களது போட்டோக்கள், திரையில் இடம் பெறச் செய்யும் புதிய முறை இன்று அமல்படுத்தப்பட இருக்கிறது.