ADVERTISEMENT

நவம்பரில் 2 நாட்கள் ஆட்சியர்கள், காவல் அதிகாரிகள் மாநாடு!

Published On:

| By christopher

Stalin

மாவட்ட ஆட்சியர்கள், காவல் அதிகாரிகள் மாநாடு 2 நாட்கள் நடைபெற உள்ளதாக இன்று (அக்டோபர் 13) அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மாநிலத்தின் சட்ட ஒழுங்கு நிலவரம், அறிவிக்கப்பட்ட நலத்திட்டங்களின் செயல்பாடுகள் உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு செய்ய ஒவ்வொரு ஆண்டும் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்கள், வனத்துறையினர் ஆகியோருடனான மாநாடு முதல்வர் தலைமையில் நடைபெறுவது வழக்கம்.

ADVERTISEMENT

அதன்படி இந்தாண்டிற்கான மாநாடு குறித்து தமிழக அரசு அறிவிப்பு ஒன்றினை இன்று வெளியிட்டுள்ளது.

அதில், ‘தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், வரும் நவம்பர் மாதம் 5 மற்றும் 6ம் தேதிகளில் சென்னை தலைமைச் செயலகத்தில் மாவட்ட ஆட்சியர்கள், வனத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கான மாநாடு நடக்கவுள்ளது. இந்த மாநாட்டில் அமைச்சர்களும், அரசு உயர் அலுவலர்களும் கலந்துக்கொள்வார்கள்’ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share