பீனிக்ஸ் – விமர்சனம்! அசத்தினாரா விஜய் சேதுபதி மகன் சூர்யா?

Published On:

| By uthay Padagalingam

Phoenix Tamil Movie Review 2025

திரையுலகில் புகழ் பெற்றிருப்பவர்களின் வாரிசுகள் நடிக்கவோ, இதர நுட்பங்களில் பங்களிக்கவோ முயற்சிப்பது புதிதல்ல. பி.யூ.சின்னப்பா, சிவாஜி கணேசன், ஏ.வி.எம்.ராஜன், முத்துராமன் தொடங்கிப் பலரது வாரிசுகள் தமிழ் திரைப்படங்களில் அறிமுகம் ஆகியிருக்கின்றனர். அவர்களில் ஒரு சிலரே தங்களது தனித்துவத்தை நிரூபித்து, தலைசிறந்த கலைஞர்களாக உருவெடுத்திருக்கின்றனர். அவர்களில் ஒருவராக இடம்பெறுவாரா என்கிற எதிர்பார்ப்பை ‘பீனிக்ஸ்’ வழியே ஏற்படுத்தியிருக்கிறார் விஜய் சேதுபதி மகன் சூர்யா. Phoenix Tamil Movie Review 2025

இந்தியாவின் முன்னணி ஸ்டண்ட் மாஸ்டர்களில் ஒருவராகத் திகழும் அனல் அரசு, இப்படத்தின் வழியே இயக்குனராக அறிமுகம் ஆகியிருக்கிறார். சாம் சி.எஸ். இதற்கு இசையமைத்திருக்கிறார். Phoenix Tamil Movie Review 2025

சம்பத்ராஜ், முத்துகுமார், திலீபன், அஜய் கோஷ், வரலட்சுமி சரத்குமார், தேவதர்ஷினி, ஸ்ரீஜித் ரவி, ஆடுகளம் நரேன், ஹரிஷ் உத்தமன், அபி நட்சத்திரா, காக்கா முட்டை விக்னேஷ் எனப் பலர் நடித்துள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருப்பதுடன் முக்கிய பாத்திரமொன்றில் தலைகாட்டியிருக்கிறார் வேல்ராஜ்.

சரி, அறிமுகப் படத்தில் அசத்தியிருக்கிறாரா சூர்யா சேதுபதி?

Phoenix Tamil Movie Review 2025

’விழா’ நாயகனா? Phoenix Tamil Movie Review 2025

பீனிக்ஸ் என்ற பறவை எரிந்து சாம்பலான பிறகும் உயிர்த்தெழும் இயல்பு கொண்டது என்று கிரேக்க புராணங்களில் குறிப்பிடப்படுகிறது. எப்படிப்பட்ட பின்னடைவு, தோல்வியில் இருந்தும் மீள்கிறவர்களையும் அப்படிச் சொல்ல முடியும்.

இந்த படத்தைப் பொறுத்தவரை, ’பீனிக்ஸ்’ என்ப்துடன் ‘வீழான்’ என்கிற வார்த்தையும் டேக்லைன் அல்லது டைட்டிலின் தொடர்ச்சியாக இடம்பெற்றிருக்கிறது. அதுவே, கதையின் சாராம்சத்தைத் தெளிவுபடுத்திவிடுகிறது.

வட சென்னையிலுள்ள ஒரு தொகுதியின் எம்.எல்.ஏவை கொலை செய்த வழக்கிற்காகச் செங்கல்பட்டு சிறார் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்படுகிறார் ஒரு பதின்ம வயதுச் சிறுவன். அந்த இல்லத்தில் அவர் அடைக்கப்பட்ட அறையில் இருக்கிற சிறுவர்கள், அவரை ஏளனமாகப் பார்க்கின்றனர், நடத்துகின்றனர்.

இந்த நிலையில், அந்த சிறுவனைக் கொல்ல அடுத்தடுத்துச் சில கூலிப்படையினர் அந்த இல்லத்திற்கு அனுப்பப்படுகின்றனர். அவர்களை அனுப்புவது எம்.எல்.ஏ குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால், ஒவ்வொரு முறையும் வந்திருப்பவர்களைத் துவைத்து கந்தல் துணியாகத் திருப்பி அனுப்புகிறார் அந்தச் சிறுவன்.

யார் அந்தச் சிறுவன்? எதற்காக இந்த கொலை வெறி? எம்.எல்.ஏவை கொல்லும் அளவுக்கு அந்தச் சிறுவனுக்கும் அவருக்கும் என்ன பகை? இந்த கேள்விகளுக்குப் பதிலளிக்கிறது ‘பீனிக்ஸ்’ படத்தின் இரண்டாம் பாதி.

மொத்தமாக இப்படம் சுமார் இரண்டு மணி நேரம் ஓடுகிறது. ஆனால், பல காட்சிகள் பாதியில் தொடங்கிப் பாதியில் முடிகின்றன. அதனால், திரைக்கதை பரபரவென்று நகர்கிற உணர்வு ஏற்படுகிறது. மிகச்சில இடங்களில் பல தகவல்கள் விடுபட்டதாகத் தோன்றுகிறது. இப்படிச் சில நிறை, குறைகள் ‘பீனிக்ஸ்’ஸில் உண்டு.

Phoenix Tamil Movie Review 2025

மோதலுக்கே முக்கியத்துவம்! Phoenix Tamil Movie Review 2025

ஒரு ஒளிப்பதிவாளர் இயக்குனர் ஆகும்போது, அப்படத்தின் லொகேஷன், ஒளிப்பதிவு உத்திகள் எல்லாமே இதுவரை பார்த்திராத வகையில் இருக்கும். இசையமைப்பாளர் இயக்குனர் ஆனால், அப்படத்தின் இசை புதிய உலகத்தைக் காட்டும். நடன இயக்குனர் ஒரு படத்தை இயக்கினால், திரைக்கதை மொத்தத்திலும் லயம் இழையும்விதமாக நளினமும் அழகியலும் ஊடாடும். இப்படிப்பட்ட எதிர்பார்ப்புகள் திரையுலகினரிடமும் ரசிகர்களிடமும் உண்டு. Phoenix Tamil Movie Review 2025

அந்த வகையில், புகழ் பெற்ற ஸ்டண்ட் மாஸ்டரின் படம் எனும்போது மயிர்கூச்செறிகிற சண்டைக்காட்சிகள் அதிகமிருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பது இயல்பு. அதனை இப்படத்தில் பூர்த்தி செய்திருக்கிறார் அனல் அரசு. அவரது பெயருக்கேற்றாற் போல, சண்டைக்காட்சிகளில் அனல் பறக்கிறது. Phoenix Tamil Movie Review 2025

சூர்யா சேதுபதிக்கு ‘ஸ்டண்ட் காட்சிகளில்’ எந்தளவுக்கு ஆர்வம் உண்டு என நமக்குத் தெரியாது. ஆனால், இனி அவர் நடிக்கப் போகிற படங்களில் ஸ்டண்ட் நன்றாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பு மேலேறும் அளவுக்கு, சண்டைக்காட்சிகள் மற்றும் அதற்கான பில்டப்களில் அசத்தல் பெர்பார்மன்ஸ் தந்திருக்கிறார். அதேநேரத்தில், இதர காட்சிகளில் ‘சுமார்’ எனும் அளவில் வந்து போயிருக்கிறார்.

‘காக்கா முட்டை’ படத்தில் நடித்த விக்னேஷ், ‘அயலி’ வெப்சீரிஸில் நடித்த அபி நட்சத்திரா இருவரும் இதில் முதன்மை பாத்திரங்களை ஏற்றிருக்கின்றனர். அவர்கள் வந்து போகிற காட்சிகள், வழக்கமான தமிழ் சினிமாக்களை நினைவுபடுத்துகின்றன. ஆனால், அவர்களது நடிப்பு அருமையாக இருப்பதைச் சொல்லத்தான் வேண்டும்.

இவர்கள் தவிர்த்து தேவதர்ஷினி, சம்பத் ராஜ், வரலட்சுமி சரத்குமார், அவரது இரண்டாவது மகனாக வருபவர், நந்தா சரவணன், அஜய் கோஷ், ஆடுகளம் நரேன், ஹரிஷ் உத்தமன், திலீபன், ஸ்ரீஜித் ரவி, ஆடுகளம் முருகதாஸ், வேல்ராஜ், முத்துகுமார், வர்ஷா விஸ்வநாத், மூணார் ரமேஷ் மற்றும் பதினெட்டு வயதுக்குக் கீழான குற்றவாளிகளாக வருபவர்கள், இதர பாத்திரங்களில் நடித்தவர்கள் என்று இப்படத்தில் பெரும்பட்டாளமே இடம்பெற்றிருக்கிறது.

அவர்களது நடிப்பு சிறப்பாக இருப்பதால், ‘அடுத்தது என்ன’ என்கிற கேள்வி மட்டுமே ஒவ்வொரு காட்சியிலும் தொக்கி நிற்கிறது.

ஒவ்வொரு காட்சியும் சட்டென்று நகர்ந்து நிறைவுறுவதைப் பெரிய குறையாகத் தெரியாமல் சமாளிக்கிறது சாம் சி.எஸ்ஸின் பின்னணி இசை. பாடல்கள் ஓகே ரகம்.

மலையாளத் திரையுலகில் மம்முட்டி, மோகன்லால், சுரேஷ்கோபி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்த ‘கமர்ஷியல்’ ஆக்‌ஷன் படங்களில், விஜயகாந்தின் பின்னாளைய படங்களில், நாயக பாத்திரத்தைத் திரையில் காட்டுவதற்கு முன்பாகவே அதன் பிரச்சனைகள், அதற்குக் காரணமான வில்லன்கள், அவர்களது பின்னணி உள்ளிட்டவை தெளிவாகத் திரைக்கதையில் முன்வைக்கப்படும்.

அதன்பிறகே திரையில் நாயக அறிமுகம் நிகழும். அப்போது, ‘எக்ஸ்ட்ரா பில்டப்’ ஹீரோயிச ஷாட்கள் நமக்கு அன்னியமாகத் தெரியாது. கிட்டத்தட்ட அந்த திரைக்கதை உத்தியை சூர்யா சேதுபதியின் அறிமுகப்படத்தில் பயன்படுத்தியிருக்கிறார் இயக்குனர் அனல் அரசு.

அதனால், நாயகன் சம்பந்தப்பட்ட சண்டைக்காட்சிகள் நமக்கு ‘அதீதமானதாகத்’ தெரிவதில்லை. Phoenix Tamil Movie Review 2025

அதற்கு, திரைக்கதையும் காட்சியாக்கமும் செறிவானதாக ரசிகர்கள் உணர்வதும் ஒரு காரணம். Phoenix Tamil Movie Review 2025

அதற்கேற்றாற் போல ஒளிப்பதிவாளர் ஆர்.வேல்ராஜ், படத்தொகுப்பாளர் பிரவீன் கே.எல்., கலை இயக்குனர் மதன், கலரிஸ்ட் சண்முகபாண்டியன் எனப் பல தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பு அமைந்திருக்கிறது.

சிறிதாக ஒரு கதை, அதில் நிறைந்திருக்கும் ஏராளமான பாத்திரங்கள், அவற்றின் ஊடாக ‘மோதலுக்கு’ முக்கியத்துவம் தரும் காட்சிகள், அவற்றுக்கு நியாயம் சேர்க்கிற ஸ்டண்ட் கொரியோகிராஃபி உள்ளிட்ட இதர தொழில்நுட்ப அம்சங்களின் அபார ஒருங்கிணைப்பு என்று ‘ஆக்‌ஷன்’ பட பிரியர்களைத் திருப்திப்படுத்துகிறவாறு அமைந்திருக்கிறது ‘பீனிக்ஸ்’.

‘பீட்சா, சூது கவ்வும் படத்துல வர்ற விஜய் சேதுபதி மாதிரி, அவரோட மகன் அசத்துவார்ன்னு பீனிக்ஸ் பார்க்க வந்தோம்’ என்று சில ரசிகர்கள் தியேட்டருக்கு செல்வார்கள். ‘விஜய் சேதுபதி பையனாம்ல இந்த ஹீரோ’ என்றவாறே சிலர் நுழைவார்கள். ’ஒரே சண்டையா இருந்தா படம் எப்படி நல்லா இருக்கும்’ என்று சிலர் முன்னபிப்ராயங்களோடு அடியெடுத்து வைப்பார்கள். இப்படி வருகிற பலவிதமான ரசிகர்களில் குறிப்பிட்ட சாராரைத் திருப்திப்படுத்துகிற வகையிலேயே உள்ளது ‘பீனிக்ஸ்’.

இனிவரும் படங்களில் இதர ரசிகர்களை சூர்யா சேதுபதி திருப்திப்படுத்துவாரா அல்லது இதே பாதையில் தனக்கான ரசிக வட்டத்தைப் பெரிதாக்கிக் கொள்வாரா என்பது அவரது அடுத்தடுத்த தேர்வுகளில் இருந்து தெரியவரும்..!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share