டிஜிட்டல் திண்ணை: எடப்பாடி தந்த சர்வே ரிசல்ட்.. எமோஷனலான அமித்ஷா.. துள்ளி குதித்த விஜய்

Published On:

| By Minnambalam Desk

வைஃபை ஆன் செய்ததும், “கணிப்புகள் எல்லாமே மெய்யானால் காலம் அலாதியானது” என்றபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.

என்னய்யா.. ஏதோ சர்வே ரிசல்ட் பத்தி பேசுற மாதிரி இருக்கே..

ADVERTISEMENT

யெஸ்யா.. நேத்து சென்னையில அக்னி நியூஸ் டீம் பிரஸ் மீட்டுல ஒரு சர்வே ரிசல்ட்டை சொன்னாங்க.. திமுக கூட்டணி 180-க்கு மேல ஜெயிக்கும்னு சொல்லி இருந்தாங்க.. அதுல கொங்கு பெல்ட்டுல திமுக ஸ்வீப்புல அடிக்கும்னு சொல்லி இருக்காங்க.. இதனால திமுக கூட்டணி செம்ம ஹேப்பியாம்..

வேற சர்வே ரிசல்ட் ஏதும் இருக்கா?

ADVERTISEMENT

என் கையில இல்லை.. ஆனா சர்வே ரிசல்ட்டை பத்தின நியூஸ் இருக்குய்யா..

டெல்லிக்கு போன எடப்பாடி பழனிசாமி, அமித்ஷா உள்ளிட்டவங்களை சந்திச்சு பேசினாரு இல்லையா?

ADVERTISEMENT

அப்ப, “கிரவுண்ட் நமக்கு சாதகமாகத்தான் இருக்குது.. எங்க சர்வே ரிசல்ட்படி நாம 143 -ல் இருந்து 155 சீட் வரைக்கும் கண்டிப்பா ஜெயிப்போம்”னு சொல்றாங்கன்னு ஒவ்வொரு மண்டலமாக எடுத்த பல்க் ரிப்போர்ட்டை காண்பிச்சிருக்காரு..

அப்ப பாஜக சைடுல இருந்தும், “நீங்க சொல்றதும் சரிதான்.. இந்த ரிசல்ட்டையும் பாருங்க”ன்னு கத்தையா சில பிரின்ட் அவுண்ட் பேப்பர்ஸை கொடுத்திருக்காங்க..

அதை படிக்க படிக்க எடப்பாடி முகமே பிரகாசமாகிடுச்சாம்.. அந்த ரிப்போர்ட்டுலேயும், “என்டிஏ கூட்டணி 152 சீட் வரைக்கும் ஜெயிக்கும்”னு எழுதி இருந்ததாம்..

இதனால ரெண்டு தரப்புமே ஒரே சந்தோஷமா இருக்காங்களாம்..

வேற ஏதும் கருத்து கணிப்பு?

இருக்கே.. விஜய்கிட்ட ஆதவ் அர்ஜூனாவும் ஜான் ஆரோக்கியசாமியும் மாறி மாறி சர்வே ரிசல்ட்டுகளை காண்பிச்சுட்டு இருந்தாங்க.. இதுல கொஞ்ச நாளா ஆதவ் டீம் டல்லா இருக்கு.. அந்த அளவுக்கு கிரவுண்ட் ரிப்போர்ட் சாதகமா இல்லாம இருக்காம்..

இதுக்கு இடையில ஜான் ஆரோக்கியசாமி ஒரு சர்வே ரிசல்ட்டை விஜய்கிட்ட காண்பிச்சாரு… அதுல தவெக தனியா நின்னே ”145-ல் இருந்து 155 இடம் ஜெயிக்கும்”னு சொல்லப்பட்டிருந்ததாம்..

இதை பத்தி விஜய் முதல்ல ரியாக்‌ஷன் எதுவுமே காண்பிக்காமலேயே சில நிமிஷங்கள் ரிப்போர்ட்டை மாத்தி மாத்தி புரட்டிகிட்டே இருந்தாராம்..

கடைசியா, “ஓகே ஹேப்பி”ன்னு மகிழ்ச்சி பொங்க சொன்னாராம் என்றபடியே டைப் செய்துவிட்டு ஆப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share