இலவச பிரிட்ஜ், வருடத்துக்கு 3 சிலிண்டர் : தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்ட ஈபிஎஸ்

By Kavi

|

Published on 24 Mar 2026, 5:27 PM

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு ஏற்கனவே மூன்று கட்டமாக தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (மார்ச் 24) மேலும் பல புதிய வாக்குறுதிகளை வெளியிட்டார்.

எல்லா குடும்பத்திற்கும் 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

ADVERTISEMENT

பெண்களுக்கு மாதம்தோறும் வழங்கப்படும் மாதம் 1000 ரூபாய் 2000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

நகர பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி பயணம் செய்வது போல அதிமுக ஆட்சியில் ஆண்களும் கட்டணமில்லாமல் பயணம் செய்யலாம்.

ADVERTISEMENT

வீடு இல்லாத அனைத்து ஏழை குடும்பத்தினருக்கும் வீடு கட்டித்தரப்படும்.

5 லட்சம் பேருக்கு அம்மா இருசக்கர வாகனம் வழங்கப்படும். அம்மா இருசக்கர வாகனம் வாங்குவதற்கு 25 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படும்.

ADVERTISEMENT

முதியோர் உதவித் தொகை 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

இளைஞர்கள், மாணவர்கள் வங்கியில் வாங்கிய கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

வாழ்வாதார உதவியாக 3 சிலிண்டர் ஒவ்வொரு குடும்பத்துக்கும் வழங்கப்படும்.

அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லாமல் பிரிட்ஜ் வழங்கப்படும்.

குடும்ப அட்டைதாரர்களுக்கு தற்போது வழங்கப்படும் விலையில்லா அரிசி போல, ஒரு கிலோ பருப்பு, ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் விலையில்லாமல் வழங்கப்படும் என்றார்

மொத்தமாக 297 அறிவிப்புகளை வெளியிட்டார் எடப்பாடி பழனிசாமி.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel