இரண்டு திரைபிரபலங்கள் காதலித்து திருமணம் செய்வது என்பது அரிது. தமிழ்சினிமாவில் கூட கைவிட்டு எண்ணக்கூடிய அளவில் தான் உள்ளனர். அவர்களில் அன்பான ஜோடிகளாக வலம் வருபவர்களில் முக்கியமானவர்களாக சூர்யா – ஜோதிகா உள்ளனர். இந்த ஜோடிக்கு தியா என்ற மகளும், தேவ் என்ற மகனும் உள்ளனர். Suriya Jyothika romantic trip in Seychelles
இருவரும் அடுத்தடுத்து படங்களில் நடித்து வெற்றிகரமாக வலம் வரும் நிலையில், கேமிராக்கள் நிறைந்த பரபரப்பான வாழ்க்கைக்கு இடையே தற்போது கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள அழகிய தீவு நாடான சீஷெல்ஸில் விடுமுறையை அனுபவிக்க சென்றுள்ளனர்.

அங்குள்ள அழகான கடற்கரைகள், மலைகள், பூங்காங்கள் உள்ளிட்ட இடங்களில் தாங்கள் மேற்கொண்ட ரொமண்டிக்கான அந்த பயணத்தை வீடியோவாக ஜோதிகா தனது இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில் சூர்யாவை குறிப்பிட்டு, “சொர்க்கத்தில் உங்களுக்கும் எனக்கும் இன்னொரு நாள் ❤️ என இந்த பயணத்தை வர்ணித்துள்ளார்.
இந்த வீடியோவக் கண்ட ரசிகர்கள் ’பெஸ்ட் ஜோடி’, விண்டேஜ் சூர்யா – ஜோதிகா’ என பரவசத்துடன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ரெட்ரோ படத்தைத் தொடர்ந்து சூர்யா தற்போது டோலிவுட் இயக்குனர் வெங்கி அட்லூரி படத்தில் நடித்து வருகிறார். தாபா கார்டெல் படத்தைத் தொடர்ந்து அஸ்வினி ஐயர் திவாரி இயக்கி வரும் பாத்தில் ஜோதிகா நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.