ADVERTISEMENT

கரூர் துயரம்: உச்சநீதிமன்றம், உயர் நீதிமன்ற விசாரணை தேவை – நயினார் நகேந்திரன்

Published On:

| By Pandeeswari Gurusamy

Supreme Court inquiry needed into Karur incident

கரூரில் நடிகர் விஜய்யின் தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நகேந்திரன் கரூரில் உயிரிழந்தவர்களின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

தமிழக பாஜக மாநிலத்தலைவர் நயினார் நகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், மாபெரும் துயரமான சம்பவம் இது. கூட்ட நெரிசலில் இதுவரை 39 பேர் உயிரிழந்துள்ளனர். ஒருவருடைய உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. இறந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு இருந்தவர்களின் குடும்பத்திற்கு வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

ADVERTISEMENT

இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம். இந்த சம்பவத்தை பொறுத்தவரையில் இன்றைக்கு உச்ச நீதிமன்ற அமர்வு உடனடியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தமிழக பாஜக சார்பில் நான் கேட்டுக்கொள்கிறேன். இது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும். இந்த சம்பவத்தில் உடனடியாக யாரையும் குறை சொல்வதற்கு பதில் தீர விசாரிக்க வேண்டும். இன்றைய உயர் நீதிமன்ற அமர்வும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share