பொது இடங்களில் தெரு நாய்களுக்கு (Stray Dogs) உணவு வழங்குவதற்கு உச்சநீதிமன்றம் அதிரடியாக தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
டெல்லியில் உள்ள அனைத்து தெருநாய்களையும் காப்பகங்களில் அடைத்து பராமரிக்க அண்மையில் உச்சநீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் பெஞ்ச் உத்தரவிட்டிருந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விலங்குகள் நல ஆர்வலர்கள் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.
இதனை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான 3 நீதிபதிகள் பெஞ்ச் விசாரித்தது. இந்த வழக்கில் இன்று (ஆகஸ்ட் 22) வழங்கப்பட்ட தீர்ப்பு:
- டெல்லியில் காப்பகங்களில் அடைக்கப்பட்டுள்ள அனைத்து தெரு நாய்களையும் விடுவிக்க வேண்டும்.
- ராபிஸ் நோயை தீவிரமாக பரப்பும் வாய்ப்புள்ள நாய்களை மட்டும் காப்பகங்களில் அடைத்து வைக்க வேண்டும்.
- இதுவரை பிடித்து செல்லப்பட்ட தெருநாய்களுக்கு கருத்தடை ஊசி போட வேண்டும்.
- பொது இடங்களில் தெருநாய்களுக்கு உணவு வழங்கக் கூடாது.
- நாய்களுக்கு என ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே உணவு வழங்கப்பட வேண்டும்.
- இதற்காக தனி இடம் அமைக்க வேண்டும். இதனை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
- நாய் கடி தொடர்பான வழக்குகள் அனைத்தும் உச்சநீதிமன்றத்துக்கு மாற்றப்படுகின்றன.
- நாடு முழுவதும் தெருநாய்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்படும் என தீர்ப்பளித்தனர்.