உங்களின் பங்களிப்பில் எங்களின் நெடும்பயணம்
மின்னம்பலம் தொடரவும் வளரவும் ஆதரவையும் அன்பளிப்பையும் நாடுகிறோம்
2016 பிப்ரவரி 19- ல் தொடங்கிய தமிழின் முதல் மொபைல் பத்திரிகையான மின்னம்பலம், தமிழ் மக்களின் பெரும் நம்பிக்கையைப் பெற்று, வாசகர்கள்/ பார்வையாளர்கள் பரப்பை விரிவுபடுத்தி, 11வது ஆண்டில் பயணத்தைத் தொடர்ந்திடும் நிலையில், தமிழ் கூறும் நல்லுலகத்தின் கூடுதல் ஆதரவை நாடுகிறோம்.
டிஜிட்டல் மயமாக்கப்பட்ட ஊடகச் சந்தையில் எந்தவொரு அரசியல் கட்சியையும் கார்ப்பரேட் நிறுவனத்தையும் சாராமல் சுதந்திரமாகவும், துணிச்சலாகவும் உண்மைச் செய்திகளை உள்ளது உள்ளபடி வழங்கிடும் மின்னம்பலம் தனது யூ-டியூப், இணையதளம் வழியிலானப் பணியினைத் தொடர்ந்திடவும், அறிவியல்-விளையாட்டு, பொருளாதாரம்-சட்டம் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த செய்திகளுடன் மேலும் வளர்ந்திடவும் உறுதியான பொருளாதாரக் கட்டமைப்பு அவசியம்.
நல்ல முயற்சிகளையும், முற்போக்கான மாற்றங்களையும் எப்போதும் ஆதரிக்கும் தமிழ் வாசக பெருமக்கள் மின்னம்பலத்திற்கு தங்களின் மனம் உவந்த அன்பளிப்பை வழங்கிட வேண்டுகிறோம். எங்கள் பயணத்தின் ஒவ்வொரு அடியிலும் உங்களின் பங்களிப்பே பாதையாக அமைகிறது.