இங்கிலாந்தின் பர்மிங்காம் மைதானத்தில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 336 ரன்கள் வித்தியாசத்தில் வென்று சரித்திரம் படைத்துள்ளது. இங்கிலாந்தின் பர்மிங்காம் மைதானத்தில் இந்திய கிரிக்கெட் அணி பெற்ற முதல் வெற்றி இது. India England Cricket Test Match
இங்கிலாந்து பயணம் மேற்கொண்டுள்ளது சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி. இங்கிலாந்து கிரிக்கெட் அணியுடன் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது.
இந்தியா- இங்கிலாந்து இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் நடந்தது. இந்திய அணி 371 ரன்களைக் குவித்திருந்த போதும் இங்கிலாந்து அணி அதை சேஸ் செய்து வென்றது.

இதனையடுத்து பர்மிங்காம் மைதானத்தில் 2-வது டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 336 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி வெற்றி வாகை சூடியது.
இங்கிலாந்து நாட்டின் இந்த பர்மிங்காம் மைதானத்தில் இந்திய கிரிக்கெட் அணி பெற்ற முதலாவது வெற்றி இது. இதே பர்மிங்காம் மைதானத்தில் இந்திய அணி இதுவரை 8 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கிறது. ஆனால் 7 போட்டிகளில் தோல்வியைத் தழுவியது; ஒரு போட்டி சமனில் -டிராவில் முடிந்தது.
58 ஆண்டுகளில் இந்திய அணி பர்மிங்காம் மைதானத்தில் பெற்ற முதல் வெற்றி இது. இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக சுப்மன் கில் பெற்ற முதல் வெற்றியும் இதுதான். அத்துடன் பர்மிங்காம் மைதானத்தில் வாகை சூடிய முதலாவது ஆசிய அணியும் இந்தியாதான் என்ற பெருமிதத்தை தந்துள்ளனர் நமது வீரர்கள்.