தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் இருந்து 11 மாணவர்கள் கோவை எம்பி கணபதி ராஜ்குமார் உடன் ஒருமாதம் இருந்து, எம்பியின் பணிகள் குறித்து தெரிந்து கொள்ள உள்ளனர். இதற்காக ஒரு மாதம் இன்டர்ன்ஷிப் பயிற்சி எடுக்க உள்ளனர்.
இதுகுறித்து கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் கூறுகையில், “நாடாளுமன்ற உறுப்பினர் என்ன செய்கிறார்? அவருடைய பணி என்ன? எம்பி நிதி எவ்வாறு மக்களுக்கு பயன்படுத்தப்படுகின்றது? என்பது குறித்து பல்வேறு கல்லூரிகளில் இருந்து தனியார் அமைப்பால் தேர்வு செய்யப்பட்ட 11 மாணவர்கள் என்னுடன் இருப்பார்கள். சில மாணவர்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் என்றால் என்ன? என்ற புரிதல் இல்லை. அதற்காக இளைய தலைமுறை புரிந்து கொள்வதற்காக மாணவர்கள் என்னுடன் பயணம் மேற்கொள்கின்றனர்.
தமிழக அரசின், “அன்பு கரங்கள் திட்டம்” பெற்றோர் இல்லாத குழந்தைகளுக்கு மாதம் 2000 ரூபாய் அந்தத் திட்டத்தை மாணவர்களுக்கு எடுத்து கூறி உள்ளேன். அவர்களுக்கு ஓட்டு முக்கியத்துவம் மற்றும் மாணவர்கள் எம்பியிடம் என்ன கற்று கொண்டார்கள் என கட்டுரை எழுத உள்ளார்கள்.
முதல் கட்டமாக 11 மாணவர்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சிக்கு பிறகு, டெல்லியில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறும் போது, ஒரு நாள் கூட்டத்தில் இந்த 11 மாணவர்களும் அங்கு சென்று பார்வையிட உள்ளார்கள் என தெரிவித்தார்.