8 ஆண்டுகளாக மக்களை சுரண்டிய மத்திய அரசு – ப.சிதம்பரம் சாடல்

Published On:

| By Pandeeswari Gurusamy

central government has exploited people for 8 years

கடந்த 8 ஆண்டுகளாக 12 % ஜிஎஸ்டி வரி விதித்து இந்திய நுகர்வோரை சுரண்டியிருக்கிறீர்கள் தானே” என முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.

டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் கடந்த செப்டம்பர் 3ம் தேதி 56-ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 5, 12, 18, 28 என நான்கு அடுக்குகளாக இருந்த ஜிஎஸ்டியை இனி 2 அடுக்குகளாக குறைக்க ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதன்மூலம் பல்வேறு பொருட்களின் விலை குறைய உள்ளது எனவும் தெரிவித்தார்.

ADVERTISEMENT

வரும் செப்டம்பர் 22ம் தேதி முதல் ஜிஎஸ்டி வரி குறைப்பு நாடு முழுவதும் அமல்படுத்தப்பட உள்ளது.

இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் தனது எக்ஸ் பதிவில், “99 சதவீத பொருட்கள் 12% ஜிஎஸ்டி வரி அடுக்கில் இருந்து 5% வரி அடுக்கிற்கு மாற்றப்பட்டதற்கு மத்திய நிதி அமைச்சர் பெருமைப்படுகிறார் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ஜிஎஸ்டி வரி விகிதங்கள் குறைக்கப்பட்டதை நாங்கள் வரவேற்கிறோம்.
ஆனால், ஒரு கேள்விக்கு நீங்கள் பதில் அளிக்க வேண்டும்.

ADVERTISEMENT

இப்போது 5% நியாயமான மற்றும் பொருத்தமான ஜிஎஸ்டி வரி விகிதமாக இருக்கும்போது, கடந்த 8 ஆண்டுகளாக இது ஏன் நியாயமாகவும் பொருத்தமாகவும் இல்லை? மத்திய அரசு கடந்த 8 ஆண்டுகளாக 12 % ஜிஎஸ்டி வரி விதித்து நுகர்வோரை சுரண்டியிருக்கிறது தானே” என கேள்வி எழுப்பி உள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share